Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Tuesday, October 23, 2018

சரி பாதியாக குறைந்த ஊழியர் எண்ணிக்கை

Image result for age

01.10.2000 அன்று BSNL உருவாக்கப்பட்டபோது, ஒட்டுமொத்த அதிகாரிகள், ஊழியர்களின் எண்ணிக்கை சுமார் 3.5 லட்சம். 01.10.2018 அன்று அந்த எண்ணிக்கை 1,74,216 ஆக குறைந்துள்ளது. 18 ஆண்டுகளில், சரிபாதி ஊழியர்கள் பணி ஓய்வில் சென்றுவிட்டனர். இத்தனைக்கும், சுமார் 40,000 ஊழியர்கள் (பெரும்பாலும் JE/JTO க்கள்) புதியதாக நியமிக்கப்பட்டுள்ளனர். 

ஊழியரின் சராசரி வயது கிட்டத்தட்ட 53 ஆக உள்ளது. இன்னும் 7 அல்லது 8 ஆண்டுகளில், DoTயில் பணியில் சேர்ந்த பெரும்பாலானவர்கள் ஓய்வு பெற்றிருப்பார்கள். அடுத்த 2 ஆண்டுகளில், 17,569 பேர் ஓய்வு பெறவுள்ளனர். அதற்கு அடுத்த 3 ஆண்டுகளில், 64,145 பேர் ஓய்வு பெறவுள்ளனர். புதிய ஆளெடுப்பு இல்லை என்று சொன்னால், இன்றைய கணக்கின் படி, 2023ல் 92,502 ஊழியர்கள் தான் இருப்பார்கள். நான்காவது ஊதிய மாற்றம் நடைபெற வேண்டிய 01.01.2027ல் 51,260 ஊழியர்கள் தான் இருப்பார்கள் என்பது வேதனையான ஒன்று. அதாவது, ஊழியர் எண்ணிக்கை நான்கில் மூன்று பங்கு குறைந்துவிடும். 

30.09.2018 அன்று வயது வாரியாக நிலவரம்

59 முதல் 60 வயது வரை : 17,569
55 முதல் 58 வயது வரை : 64,145
50 முதல் 54 வயது வரை : 41,242
45 முதல் 49 வயது வரை : 15,542
40 முதல் 44 வயது வரை : 12,184
35 முதல் 39 வயது வரை : 10,022
30 முதல் 34 வயது வரை :   8,225
25 முதல் 29 வயது வரை :   4,318
24 வரை                                   :       969

மொத்தம்                            : 1,74,216

மேற்கண்ட அவல நிலையால், அனைத்து பணிகளும் OUTSOURCING முறையில் தனியாருக்கு போக கூடிய அபாயம் உள்ளது. அது சேவை திறனை முற்றிலும் பாதிக்கும். சேவை மேம்பாட்டிற்கு, புதிய ஆளெடுப்பு என்பது அவசியம். புதிய ஆளெடுப்பு என்பது இரண்டு வகையில், நடத்த பட வேண்டும்.

01. 10 ஆண்டுகள் சேவை முடித்த, ஒப்பந்த ஊழியர்கள் நிரந்தரம் செய்யப்பட வேண்டும். தற்காலிக ஊழியர்கள் உள்ள இடங்களில் அவர்களும் நிரந்தரமாக்க பட வேண்டும்.

02. நேரடி நியமனம்.

தோழமையுடன்
E . கோபால்,
மாவட்ட செயலர்

தகவல்: தோழர் V. A .N . நம்பூதிரி இணையம்

BSNL கார்ப்பரேட் அலுவலக கடித எண்: U .O .No. 3-4/2017 Estt.III(BSNL) Dated 09.10.2018 காண இங்கே சொடுக்கவும்