BSNLEU மற்றும் NFTEBSNL சங்க தலைவர்கள் CMD BSNL அவர்களை இன்று, 05.10.2018 சந்தித்து சில முக்கிய பிரச்சனைகளை விவாதித்தனர். BSNLEU சார்பாக, நமது பொது செயலர் தோழர் P . அபிமன்யூ, துணை பொது செயலர் தோழர் ஸ்வபன் சக்ரவர்த்தி, NFTEBSNL சார்பாக அதன் பொது செயலர் தோழர் சந்தேஷ்வேர் சிங், துணை பொது செயலர் தோழர் சேஷாத்திரி ஆகியோர் கலந்து கொண்டனர். தலைவர்கள் விவாதித்த விஷயங்கள் சுருக்கமாக:
01. BSNL ஊழியர்களுக்கு சம்பள மாற்றம் செய்ய தடையாக உள்ள செலவிடும் தன்மை, (AFFORDABILITY) பிரிவிலிருந்து விலக்கு பெறும் கோரிக்கையில் ஏற்படும் கால தாமதம் வருத்தம் அளிக்கும் விதத்தில் உள்ளதை, தலைவர்கள் சுட்டி காட்டினார். இனியும், தாமதித்தால் சில கடினமான முடிவுகள் எடுக்க நேரிடும் என தலைவர்கள் எச்சரித்தனர்.
02. கேரள வெள்ள நிவாரண நிதிக்கு BSNL ஊழியர்கள் தங்கள் ஒரு நாள் ஊதியத்தை வழங்கியுள்ளார்கள். ஏற்கனவே, CMD ஒப்புக்கொண்டபடி அதை நேரடியாக கேரள முதல்வரிடம் வழங்க வேண்டும் என தலைவர்கள் மீண்டும் நினைவு படுத்தினர். இது சம்மந்தமாக DoT யிடம் விளக்கம் கேட்டு உள்ளதாகவும், பதில் எதிர்பார்த்து காத்திருப்பதாகவம், CMD பதில் அளித்தார்.
03. புதிய ஊதிய விகிதங்களை ஊதிய மாற்றக்குழு கிட்டத்தட்ட இறுதி படுத்திவிட்டது. இனி படிகள் (PERKS & ALLOWANCES) சம்மந்தமாக அடுத்த கூட்டத்தில் இறுதி படுத்த உள்ளது. நிதி ஆதாரங்களை காரணம் காட்டி படிகள் மாற்றத்தை தடுக்க கூடாது என தலைவர்கள் தெளிவாக, CMD யிடம் விளக்கினர்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்