12.10.2018, நேற்று, நமது பொது செயலர் தோழர் P. அபிமன்யூ, BSNL CMD திரு. அனுபம் ஸ்ரீவட்சவா அவர்களை சந்தித்து சில பிரச்சனைகளை விவாதித்தார். அதன் விவரங்கள் சுருக்கமாக:
01. மைசூரில் 17.12.2018 முதல் 20.12.2018 வரை நடைபெறவுள்ள நமது சங்கத்தின் 9வது அகில இந்திய மாநாட்டின், "சேவை கருத் தரங்கத்திற்கு" வருமாறு, CMD அவர்களை நமது பொது செயலர் அழைத்தார். CMD கருத்தரங்கில் கலந்து கொள்வதாக உறுதி அளித்தார்.
02. 24.02.2018 அன்று மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சருடன், AUAB கூட்டமைப்பு நடத்திய பேச்சு வார்த்தையில், அமைச்சர் கொடுத்த வாக்குறுதிகளில் முன்னேற்றம் ஏற்படாததால், மீண்டும் அமைச்சரை சந்திக்க ஏற்பாடு செய்யுமாறு, நமது பொது செயலர் கோரிக்கை வைத்தார். AUAB சார்பான இந்த கோரிக்கையை ஏற்று, அடுத்த வாரத்தில் ஏற்பாடு செய்ய ஆவணம் செய்வதாக CMD தெரிவித்தார்.
03. கேரள வெள்ள நிவாரண நிதியாக ஒரு நாள் ஊதியம் ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்டது. அந்த நிதியை கேரள முதல்வரை நேரில் சந்தித்து வழங்கினால், BSNLக்கு விளம்பரமாக அமையும் என ஏற்கனவே AUAB சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. அதன் தற்போதைய நிலையை, நமது பொது செயலர் வின வினார். DoTக்கு BSNL எழுதிய கடிதத்திற்கு பதில் வரவில்லை என்றும், ஆனால் தாம் அடுத்த வாரம் புதியதாக பொறுப்பேற்ற, DoT நிர்வாக இணை செயலரை நேரில் சந்திக்க உள்ளதாகவும், அப்பொழுது AUAB கோரிக்கை சம்மந்தமாக விவாதிப்பதாகவும், CMD பதில் அளித்தார்.
04. JE பதவி உயர்வு இலாக்கா போட்டி தேர்வை பழையபடி, OFFLINE முறையில் நடத்த வேண்டும் என நமது பொது செயலர் கோரிக்கை வைத்தார். CMD கோரிக்கையை ஆழமாக பரிசீலிப்பதாக பதில் அளித்தார்.
05.SENIOR ACCOUNTANT கேடருக்கு GROUP B அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை பரிசீலிப்பதாக CMD தெரிவித்தார்.
06.MANAGMENT TRAINEE பதவி உயர்வு இலாக்கா போட்டி தேர்வு, விரைந்து நடத்திட நமது பொது செயலர் கோரிக்கை வைத்தார். நிர்வாக குழு ஒப்புதல் கிடைத்துள்ளதாகவும், தேர்வு விரைந்து நடத்தப்படும் என CMD தகவல் தெரிவித்தார்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்