17.10.2018 அன்று TNTCWU மாநில மாநாட்டு முடிவின்படி, போராட்ட இயக்கம் நடத்தி முடித்துவிட்டு, BSNLEU சேலம் மாவட்ட சங்க அலுவலகத்தில், TNTCWU சேலம் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு, தோழர் K . ராஜன், தலைமை தாங்கினார். TNTCWU மாநில உதவி செயலர் தோழர் C . பாஸ்கர், செயற்குழுவை துவக்கி வைத்தார். TNTCWU சேலம் மாவட்ட செயலர் தோழர் M . செல்வம், ஆய்படு பொருளை அறிமுகப்படுத்தி உரை நிகழ்த்தினார். BSNLEU மாவட்ட உதவி செயலர் தோழர் S . ஹரிஹரன், கருத்துரை வழங்கினார்.
BSNLEU சேலம் மாவட்ட செயலர் தோழர் E . கோபால், சிறப்புரை வழங்கினார்.
தோழர் விஜயகுமார், மெய்யனுர் கிளை செயலர் நன்றி கூறி கூட்டத்தை முடித்து வைத்தார்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்