AUAB கூட்டமைப்பின், நாடு தழுவிய போராட்ட இயக்கத்தின் ஒரு பகுதியாக, 30.10.2018 அன்று சேலம் மாவட்ட AUAB கூட்டமைப்பு சார்பாக மாபெரும் தர்ணா போராட்டம், சேலத்தில் சிறப்பாக நடைபெற்றது. சேலம் MAIN தொலைபேசி நிலையம் முன்பு, காலையில் துவங்கிய போராட்டத்திற்கு தோழர்கள் M . விஜயன் (BSNLEU), N. சந்திரசேகரன்(SNEA), R . மணிகண்டன், (AIBSNLEA) கூட்டு தலைமை தாங்கினர்.
முதல் நிகழ்வாக, தோழர்கள் அனைவரும் எழுந்து நின்று, தர்ணா பந்தலில், சக்திமிக்க கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர்.தலைமை உரைக்கு பின், SNEA மாவட்ட பொருளர் தோழர் G. சேகர் போராட்டத்தை முறைப்படி துவக்கி வைத்தார்.
BSNLEU மாவட்ட உதவி செயலர்கள் தோழர்கள், S. ஹரிஹரன், P. சண்முகம் கருத்துரை வழங்கினார்கள். ஓய்வு பெற்ற நல சங்கங்கள் சார்பாக தோழர்கள் மதியழகன் (AIBDPA), ரகுபதி, பட்டாபிராமன் (AIBSNLPWA), ஒப்பந்த ஊழியர்கள் சார்பாக, TNTCWU சேலம் மாவட்ட செயலர் தோழர் P . செல்வம், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
பின்னர் BSNLEU தமிழ் மாநில உதவி தலைவர் தோழர் S . தமிழ்மணி, AUAB கூட்டமைப்பின் சேலம் மாவட்ட செயலர்கள், தோழர்கள் M . சண்முகசுந்தரம், (AIBSNLEA), R . மனோகரன் (SNEA), E . கோபால், (BSNLEU) ஆகியோர் சிறப்புரை வழங்கினார்கள்.
மாவட்டம் முழுவதிலுமிருந்து சுமார் 250க்கும் மேற்பட்ட தோழர்கள் திரளாக பங்கேற்ற இந்த போராட்டத்தை தோழர் P . தங்கராஜு (BSNLEU) நன்றி கூறி முடித்து வைத்தார்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்