சேலம் மாவட்ட AUAB கூட்டமைப்பு சார்பாக, இன்று, 28.11.2018, வேலை நிறுத்த பிரச்சார கூட்டம், சேலம் PGM அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது. கூட்டத்திற்கு தோழர்கள் M . விஜயன், (BSNLEU), N . சந்திரசேகரன், (SNEA), R .மணிகண்டன், (AIBSNLEA) ஆகியோர் கூட்டு தலைமை தாங்கினர் . தோழர் M . சண்முகசுந்தரம், மாவட்ட செயலர், AIBSNLEA, அனைவரையும் வரவேற்றார்.
தோழர் G. சேகர், SNEA, மாநில சிறப்பு அழைப்பாளர், தோழர் C . துரையரசன், மாநில செயலர், AIBSNLEA, தோழர் S . செல்லப்பா, அகில இந்திய உதவி பொது செயலர், BSNLEU ஆகியோர் சிறப்புரை வழங்கினார்கள்.
தோழர்கள் E . கோபால், மாவட்ட செயலர், BSNLEU, தோழர் S . தமிழ்மணி, மாநில உதவி தலைவர், BSNLEU ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.
மாவட்டம் முழுவதிலுமிருந்து, சுமார் 350 ஊழியர்கள், அதிகாரிகள், (50க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட) கலந்து கொண்ட இந்த கூட்டத்தை தோழர் R . மனோகரன், மாவட்ட செயலர், SNEA நன்றி கூறி முடித்து வைத்தார்.
தோழமையுடன்,
E . கோபால்,
கன்வீனர், AUAB