Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Saturday, November 3, 2018

நிறைவான போனஸ்! உயர்வான சம்பளம்!! தித்திக்கும் தீபாவளி!!!

Image result for diwali wishes


அடுக்கப்பட்ட மூட்டையில் அடி மூட்டையாக, சமூக படி நிலையில் அமர்த்தப்பட்ட, ஒப்பந்த ஊழியர்களுக்காக முதன் முதலில், 1999லேயே சங்கம் துவங்கியவர்கள் நாம். இன்றும், அகில இந்திய அமைப்புடன், சம்மேளனமாக, ஒரே பெயரில், ஒரே கொடி, ஒரே கொள்கையுடன் இயங்கக்கூடியவர்கள் நாம். மாவட்டத்திற்கு ஒரு பெயர், மாநில வாரியாக பல அமைப்புகள் என இயங்காதவர்கள் நாம். 

ஒப்பந்த ஊழியர்கள், அணி திரட்டப்படாமல், ஒப்பந்ததாரர் விருப்பத்திற்குகேற்ப பணி , ஒவ்வொரு ஊருக்கும் ஒரு சம்பளம், சமூக பாதுகாப்பு சலுகைகள் எதுவும் இல்லாத நிலை என பல அவலங்களை சந்தித்து வந்தனர். அந்த ஒப்பந்த ஊழியர்களை, அணிதிரட்டி, ஒப்பந்ததாரர் மாறினாலும், நிலையான பணி, மாவட்டம் முழுவதும் ஒரே மாதிரியான சம்பளம், EPF /ESI உள்ளிட்ட பாதுகாப்பு சலுகைகள் என பல முன்னேற்றங்களை அவர்கள் வாழ்வில் ஏற்படுத்தியவர்கள் நாம். 1999ல் TNTCWU சங்கமாக உருவாகி, BSNLEU சங்கத்துடன் இணைந்து செயலாற்றி, BSNLCCWF என்ற சம்மேளனத்துடன், அகில இந்திய அளவில் பேரியக்கமாக உருவாகி இயங்குகிறவர்கள் நாம்.


இந்த பின்னணியில், BSNLEU / TNTCWU சங்கங்களின் தொடர் முயற்சியின் பலனாக, "திறனுக்கேற்ற கூலி" என்ற சாதக உத்தரவை, கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு முன், தமிழ் மாநில நிர்வாகம் பிறப்பித்தது. நமது சேலம் மாவட்டத்தில், இந்த SEMISKILLED உத்தரவை அமுல்படுத்த பல கட்ட இயக்கங்கள் நடத்தியவர்கள் நாம். நிர்வாகத்துடன் தொடர்ந்து பேசி, அதற்கான குழுவை ஏற்படுத்த தொடர்ந்து வலியுறுத்தி, பின், அந்த குழுவின் பரிந்துரையை அமுல்ப்படுத்த பல முயற்சிகள் நாம் செய்தோம். ஆர்ப்பாட்டம், தர்ணா, தொழிலாளர் நல ஆணையரிடம் மகஜர் என நாம் இந்த ஓர் ஆண்டில் எண்ணற்ற இயக்கங்கள் நடத்தினோம். 


ஒரு வழியாக, 01.11.2018 முதல், சேலம் மாவட்டத்தில் பணி புரியும், ஒப்பந்த ஊழியர்களுக்கு SEMI SKILLED ஊதியம் வழங்குவதற்கான உத்தரவு வெளியாகியுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம். இதன்படி, நமது மாவட்டத்தில், கேபிள் பகுதிகளில் பணி புரியும் 91 ஊழியர்களும், INFRA பகுதிகளில் பணிபுரியும் 79 ஊழியர்களும் 01.11.2018 முதல் உயர்வான சம்பளம் பெற உள்ளனர். 


170 ஊழியர்களுக்கும், சுமார் 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் வரை உயர்வு பெறவு ள்ளனர். நகர பகுதிகளில் ரூ.466.00 தினக்கூலி பெற்ற தோழர்கள், இனி ரூ. 527.00 தினக்கூலி பெறுவர். ஊரக பகுதிகளில், ரூ. 373.00 தினக்கூலி பெற்ற தோழர்கள், இனி ரூ.437.00 தினக்கூலி பெறுவர்.  


நிறைவான போனஸ் 


உயர்வான சம்பளம் பெற்றதுபோல், BSNLEU-TNTCWU சேலம் மாவட்ட சங்கங்களின் தொடர் முயற்சியின் பலனாக, மாவட்டம் முழுவதும் கேபிள் பகுதிகளில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு, இந்த ஆண்டு  தீபாவளி போனஸ் , வங்கிக்கு அனுப்பபட்டுள்ளது. மூன்று ஒப்பந்ததாரர்கள், நமது மாவட்டத்தில் மண்டல வாரியாக ஒப்பந்தம் எடுத்து, இயங்கி வருகிறார்கள். 

அதன் அடிப்படையில், நகர பகுதிகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, 8.33 அடிப்படையில், அதிகபட்சமாக, ரூ.12,544.00 வரை  (15 மாதங்களுக்கு) கிடைக்கும். 
ஊரக பகுதிகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, குறைந்தபட்ச போனஸ் ரூ.7000/- என்ற அடிப்படையில், ரூ.7,772.00 வரை  (13 மாதங்களுக்கு) கிடைக்கும். 
House keeping தோழர்களுக்கு ஒரிரு நாளில் பட்டுவாடா நடைபெறும். 

CIVIL பகுதிகளில் ஆறு மாதத்திற்கு ரூ.5000 மற்றும் STR பகுதிகளில் பணி புரியும் தோழர்களுக்கு ஆறு மாதத்திற்கு ரூ.3500 பட்டு வாடா செய்யப்பட்டுள்ளது. 

கிளை செயலர்கள் தங்கள் பகுதி தோழர்களுக்கு சரியான தொகை வரவு வைக்கப்பட்டுள்ளதா, என சரிபார்த்து, தவறும் பட்சத்தில் மாவட்ட சங்கத்தை தொடர்பு கொள்ளவும். 

அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்.  

வாழ்த்துக்களுடன்,

E. கோபால், மாவட்ட செயலர், BSNLEU
M. செல்வம், மாவட்ட செயலர், TNTCWU
மாவட்ட சங்க நோட்டீஸ் காண இங்கே சொடுக்கவும்