BSNLEU தமிழ் மாநில உதவி தலைவரும், சேலம் மாவட்ட தள மட்ட கவுன்சில், ஊழியர் தரப்பு செயலருமான, தோழர் S . தமிழ்மணி, அவர்களின் புதல்வி திருமணம், இன்று, (11.11.2018) திருச்செங்கோட்டில் வெகுசிறப்புடன் இனிதே நடைபெற்றது.
மணமக்கள் திருநிறைச்செல்வி T . சுஜிதா, B.E., திருநிறைச்செல்வன் K . சண்முகவேல் M.C.A., ஆகியோர், எல்லா வளமும், நலமும் பெற்று பல்லாண்டு வாழ BSNLEU சேலம் மாவட்ட சங்கம் வாழ்த்துகிறது.
மேற்படி திருமணத்தின், வரவேற்பு, நாளை (12.11.2018), திருச்செங்கோட்டில் நடைபெறவுள்ளது. BSNLEU அகில இந்திய உதவி பொது செயலர் தோழர் S . செல்லப்பா, தமிழ் மாநில செயலர் தோழர் A . பாபு ராதா கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.
அதேபோல் தோழமைக்குரிய தொழிற்சங்க தலைவர்கள், BSNL அதிகாரிகள், ஊழியர்கள், தோழர்கள், தோழியர்கள், நண்பர்கள், உறவினர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
அனைவரையும் BSNLEU சேலம் மாவட்ட சங்கம் இனிதே வரவேற்கிறது.
வரவேற்பு விழா பத்திரிக்கை கிடைக்க பெறாத தோழர்கள் இதேயே அழைப்பாக ஏற்று, விழாவில் கலந்து கொள்ளுமாறு தோழமையுடன் கேட்டு கொள்கிறோம்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்