AUAB கூட்டமைப்பு, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 14.11.2018, நேற்று, நாடு முழுவதும் பேரணி நடத்த அறைகூவல் கொடுத்திருந்தது. அதன்படி, நமது சேலம் மாவட்டத்தில், 14.11.2018, மாலை 5 மணிக்கு, மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்தில் இருந்து பேரணி துவங்கியது.
400க்கும் மேற்பட்ட தோழர்கள், தோழியர்கள் கலந்து கொண்டு, பதாகையை ஏந்தி, கோஷங்களை எழுப்பி, சேலத்தின் மைய பகுதிகளில் வலம் வந்த இந்த பேரணி, சேலம் MAIN தொலைபேசி நிலையத்தில் நிறைவுற்றது.
பேரணியில், BSNL ஊழியர்கள், அதிகாரிகள், ஓய்வு பெற்றோர், ஒப்பந்த ஊழியர்கள் என அனைத்து பகுதி தோழர்களும் கலந்து கொண்டது சிறப்பான விஷயம். 100க்கும் மேற்பட்ட பெண் தோழியர்கள் கலந்து கொண்டது பாராட்டுக்குரியது.
BSNLEU, SNEA, AIBSNLEA, TNTCWU சங்கங்களை சேர்ந்த தோழர்கள், ஓய்வுதியர் சங்க தோழர்களுடன் கலந்து, பேரணியாக வந்தது, கோரிக்கையின் நியாயத்தை உணர்த்தும் விதத்தில் இருந்தது.
அனைத்து சங்க மாநில, மாவட்ட, கிளை நிர்வாகிகள், முன்னணி தோழர்கள், ஒப்பந்த ஊழியர்கள், தோழர்கள் தோழியர்கள் அனைவருக்கும், சேலம் மாவட்ட AUAB கூட்டமைப்பு சார்பாக நெஞ்சு நிறை நன்றி.
இதே வேகத்தை தக்க வைத்து, 03.12.2018 முதல் நடைபெற உள்ள காலவரையற்ற வேலை நிறுத்தத்தை நமது மாவட்டத்தில் வெற்றிகரமாக்குவோம். கோரிக்கைகளை வென்றெடுப்போம்.
நன்றிகளுடன்,
E . கோபால்,
கன்வீனர், AUAB