BSNLEU மாநில உதவி தலைவர் தோழர் S . தமிழ்மணி, செயற்குழுவை முறைப்படி துவக்கி வைத்து துவக்கவுரை வழங்கினார். ஆய்படு பொருளை அறிமுகப்படுத்தி, தோழர் E . கோபால், மாவட்ட செயலர் சிறப்புரை வழங்கினார்.
பின்னர் நடைபெற்ற விவாதத்தில், மாவட்ட சங்க நிர்வாகிகள், கிளை செயலர்கள் பங்கு பெற்றனர். விவாதத்திற்கு மாவட்ட செயலர் பதில் வழங்கியபின், அகில இந்திய மாநாட்டு சார்பாளர்கள், பார்வையாளர்கள் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
2019 ஜனவரி 8, 9 இரண்டு நாள் பொது வேலை நிறுத்தத்தை, நமது மாவட்டத்தில் வெற்றிகரமாக்குவது, கிளை மாநாடுகள் நடத்தாத கிளைகள் மாநாடுகள் நடத்துவது உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டது. தோழர் P . தங்கராஜ், மாவட்ட பொருளர் நன்றி கூறி, கூட்டத்தை முடித்து வைத்தார்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்