9வது அகில இந்திய மாநாட்டு முடிவுகள் சுருக்கமாக:
01. 2019 ஜனவரி 8, 9 தேதிகளில் நடைபெறவுள்ள நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்தை நமது BSNL அரங்கில் வெற்றி பெறச்செய்வது.
02. ஒப்பந்த ஊழியர் குறைந்தபட்ச ஊதியம் அதிகரிப்பது, EPF ESI சமூக நல சலுகைகளை முழுமையாக அமுல் படுத்துவது, ஒப்பந்த ஊழியர் எண்ணிக்கையை குறைக்கும் நடவடிக்கையை தடுப்பது, உள்ளிட்ட கோரிக்கைகளில் BSNLCCWF அமைப்புடன் இணைந்து போராட்டங்கள் நடத்துவது.
03. BSNL நிதி ஆதாரங்களை அதிகப்படுத்துவதற்கு கூடுதல் கவனம் செலுத்துவது. AUAB கோஷமான "BSNL உங்கள் இல்லம் தேடி" இயக்கத்தை வெற்றி பெறச்செய்வது.
04. AUAB கூட்டமைப்பு அகில இந்திய அளவில் இயங்குவது போல, மாநில மாவட்ட மட்டங்களிலும் அமைப்பு ரீதியாக இயங்க ஏற்பாடுகள் செய்வது.
05. BSNL உழைக்கும் மகளிர் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்படாத மாநிலங்களில் BSNLWWCC அமைப்பை உருவாக்குவது.
06. BSNLWWCC அமைப்பின் கன்வீனர், BSNLEU மத்திய செயற்குழுக்களில் "நிரந்தர அழைப்பாளராக" கலந்து கொள்வது.
07. போபாலில் மத்திய சங்கம் நடத்தியது போல், இளம் தோழர்களுக்கான பயிற்சி முகாம்களை நடத்தாத மாநிலங்கள் 31.03.2019க்குள் நடத்துவது.
08. மாநாடுகள், செயற்குழுக்களில் எடுக்கப்பட்ட முடிவுகள் அமுலாக்கம் சம்மந்தமாக, அகில இந்திய, மாநில, மாவட்ட மட்டங்களில் "இடைக்கால பரிசீலனை" மேற்கொள்வது.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
செய்தி: மத்திய சங்க இணையம்