03.12.2018 அன்று மத்திய தொலைத்தொடர்பு அமைச்சருடன், AUAB தலைவர்கள் பேச்சு வார்த்தை நடத்தியதன் பின்னணியில், காலவரையற்ற வேலை நிறுத்தம் ஒத்தி வைக்கப்பட்டது. பேச்சு வார்த்தையின் சாராம்சங்களை, MINUTES ஆக , "RECORD OF DISCUSSIONS" என DoT/BSNL வெளியிட்டுள்ளது.
அதன்படி, BSNL நிறுவனத்திற்கு 4G அலைக்கற்றை ஒதுக்கீடு, ஓய்வூதிய மாற்றம், ஓய்வூதிய பங்களிப்பு ஆகிய விஷயங்களில், ஓய்வூதியர்களுக்கு, BSNL நிறுவனத்திற்கு சாதகமான முடிவுகளை அமுலாக்க வேகமாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக DoT செயலர் உறுதி அளித்துள்ளார். நடவடிக்கைகளை விரைந்து முடிக்குமாறு அமைச்சர் கேட்டு கொண்டார்.
மூன்றாவது ஊதிய மாற்றம் சம்மந்தமாக மேலும் சில கூடுதல் விவரங்களை BSNL வழங்கவேண்டும். அனைவருக்கும் சாதகமாக தீர்வு ஏற்பட விரைந்து முடிவு எடுக்கும் படி, அமைச்சர் உத்தரவிட்டார்.
கூடுதலாக, தொழிற்சங்க தலைவர்களுக்கும், DoT க்கும் தொடர்ச்சியான தகவல் பரிமாற்றங்கள் செய்து கொள்ள ஆக்கபூர்வமான அமைப்பு முறையை உருவாக்க வேண்டும் என அமைச்சர் கேட்டு கொண்டார்.
அதேபோல், தொலைத்தொடர்பு சந்தையில், BSNL நிறுவனம் ஒரு கேந்திரமான பாத்திரம் வகிக்க அனைவரும் பாடு பட வேண்டும் என்றும், அரசாங்கம் அதற்கு துணை நிற்கும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மேற்கண்ட உறுதிமொழிகள் அடிப்படையில், வேலை நிறுத்த போராட்டத்தை கைவிட வேண்டும் என அமைச்சர் கேட்டு கொண்டுள்ளார்.
BSNL ஊழியர்களும், அதிகாரிகளும், BSNL நிறுவனத்தை காக்க மேற்கொண்ட நல்ல நடவடிக்கைகளை முதலில் பாராட்டி விட்டு, அது தொடரவேண்டும், அது தான் பொது நலனுக்கு ஏற்புடையது என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
AUAB தலைவர்களுக்கு DoT வெளியிட்டுள்ள MINUTES காண இங்கே சொடுக்கவும்