Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Thursday, December 27, 2018

"சஞ்சார் சாப்ட்" மென் பொருள் பழுது பிரச்சனை


புதிய சிம்கள் விற்பனை செய்ய, பழுதடைந்த / தொலைந்த சிம்கள் மாற்றித்தர, MNP  என CSC யில் மேற்கொள்ளப்படும் அன்றாட பணிகளுக்கு அடிப்படை தேவையான மென்பொருள் தான் "SANCHARSOFT" எனும் மென்பொருள் ஆகும். தென் மாநிலங்களின் BSNL சேவைகளுக்கு உள்ள இந்த மென்பொருளின் தலைமை சேவையகம் (SERVER) திருச்சியில் உள்ளது.

கடந்த 21.12.2018 முதல், தீடிரென அந்த SERVER பழுதடைந்து விட்டது. நமது பொறியாளர்கள் எவ்வளவு முயன்றும் இந்த நிமிடம் வரை (1915/27.12.2018) வரை பழுது, முழுமையாக சரி செய்யப்படவில்லை. அதனால், வாடிக்கையாளர் சேவை மையங்களில் உள்ள நமது ஊழியர்கள், கடும் நெருக்கடிக்கு உள்ளாகி வருகின்றனர். அதோடு, BSNL சேவைகளும் ஆறு நாட்களாக முடங்கி, வாடிக்கையாளர்களும் பெறும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

கடந்த 22.12.2018 அன்று மாவட்ட சங்கம் உடனடியாக மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொண்டு, பிரச்னையை விவாதித்தது. தீர்வு ஏற்படாததால், மாநில சங்கத்தை 24.12.2018 அன்று தொடர்பு கொண்டோம். மாநில சங்கமும் மாநில உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பிரச்னையை விவாதித்தது. 

நேற்று, 26.12.2018, நமது பொது செயலர் தோழர் P . அபிமன்யூ, BSNL CMD அவர்களை அவசரமாக தொடர்பு கொண்டு நிலைமையை சீர் செய்ய கோரியதன் அடிப்படையில், SIM REPLACEMENT என்று சொல்லக்கூடிய, "இருக்கும் எண்ணிற்கு மாற்று சிம் வழங்குவது" மட்டும், சரி செய்யப்பட்டுள்ளது.

இன்று, 27.12.2018 நமது பொது செயலர் மீண்டும் BSNL CMD அவர்களுக்கு, நிலைமையை விரைந்து சரி செய்ய  கடிதம் எழுதியுள்ளார். நமது தொடர் முயற்சியின் பலனாக, பிரச்சனை விரைவில் தீர்க்கப்படும் என எதிர்பார்க்கிறோம். 

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
மத்திய சங்கம் கடிதம் காண இங்கே சொடுக்கவும்