நமது நிறுவனத்தில், தள மட்டத்தில் செய்யப்பட வேண்டிய அன்றாட செலவுகளுக்கு கூட பணம் இல்லாமல், கடுமையான நிதி நெருக்கடி நிலவுவதால், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் BSNL கடன் கோரியிருந்தது. DoT பல்வேறு முட்டுக்கட்டைகளை போட்டது. AUAB சார்பாக, மத்திய அமைச்சருடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையில், நமது தலைவர்கள் இந்த கோரிக்கையையும் எழுப்பினர். 28.12.2018 அன்று BSNL CMD அவர்களை நமது பொது செயலர் தோழர் P . அபிமன்யூ தொடர்பு கொண்டு நிலைமையை கேட்டறிந்தார்.
அதற்கு பதில் அளித்த, CMD, ஆந்திரா மற்றும் விஜயா வங்கிகள் BSNL நிறுவனத்திற்கு ரூ. 1000 கோடி கடன் தர உள்ளதாகவும், 31.12.2018க்குள் நிலைமை சீராகும் என நம்பிக்கை தெரிவித்தார். நிதி வந்தால் ஊழியர்களின் மருத்துவ படிகள், GPF, TA பில்கள், மின் கட்டணம், டவர் வாடகை, ஒப்பந்த ஊழியர் சம்பளம் உள்ளிட்ட விஷயங்கள் தீர்வு ஏற்படும் என CMD தகவல் தெரிவித்தார்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
தகவல் : மத்திய சங்க இணையம்.