நாடு தழுவிய இரண்டு நாள் வேலை நிறுத்த போராட்டத்தின், இரண்டாம் நாள், 09.01.2019 அன்று மாபெரும் வேலை நிறுத்த ஆதரவு ஆர்ப்பாட்டம், சேலம் PGM அலுவலகம் முன்பு, BSNLEU - TNTCWU சங்கங்கள் சார்பாக நடைபெற்றது. போராட்டத்திற்கு தோழர் K. ராஜன், மாவட்ட தலைவர், TNTCWU தலைமை தாங்கினார்.
BSNLEU மாவட்ட தலைவர் தோழர் M . விஜயன் போராட்டத்தை துவக்கி வைத்தார். SNEA மாவட்ட செயலர் தோழர் R . மனோகரன், மாவட்ட பொருளர் தோழர் G. சேகர் உடன் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.
BSNLEU தமிழ் மாநில உதவி தலைவர் தோழர் S . தமிழ்மணி, BSNLEU சேலம் மாவட்ட செயலர் தோழர் E . கோபால் ஆகியோர் சிறப்புரை வழங்கினார்கள்.
TNTCWU மாநில உதவி செயலர் தோழர் C .பாஸ்கர், TNTCWU சேலம் மாவட்ட செயலர் தோழர் M . செல்வம், BSNLEU மாவட்ட உதவி செயலர் தோழர் S . ஹரிஹரன் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.
BSNLEU மாவட்ட அமைப்பு செயலர் தோழர் P . செல்வம் ஆர்ப்பாட்ட கோஷங்களை எழுப்ப, மாவட்ட பொருளர் தோழர் P . தங்கராஜ், நன்றி கூறி போராட்டத்தை முடித்து வைத்தார். மாவட்டம் முழுவதிலுமிருந்து 200க்கும் மேற்பட்ட தோழர்கள், தோழியர்கள் கலந்து கொண்டனர்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்