Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Saturday, January 26, 2019

18.02.2019 முதல் மூன்று நாட்கள் வேலை நிறுத்தம்- AUAB அறைகூவல்



25.01.2019 அன்று நடைபெற்ற AUAB கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்:-

1) பல்வேறு எதார்த்த நிலைமைகளை கணக்கில் கொண்டு, BSNLல் உள்ள அதிகாரிகளும், ஊழியர்களும் 18.02.2019 முதல் 3 நாட்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட AUAB அறைகூவல் விடுக்கின்றது.

2) நமது போரட்ட கோரிக்கைகளின் மீது பொதுமக்களின் ஆதரவை திரட்டும் வகையில் 11.02.2019 முதல் 5 நாட்கள் தெருமுனை பிரச்சாரம் செய்வது.

3) மாநில/மாவட்ட மட்டங்களில் பிப்ரவரி 12/13 தேதிகளில் பத்திரிக்கையாளர் சந்திப்புகளை நடத்துவது.

4) BSNLஇன் புத்தாக்கம் உள்ளிட்ட நமது கோரிக்கைகளின் மீது அனைத்து அரசியல் கட்சிகளையும் சந்தித்து ஆதரவை திரட்டுவது.

கோரிக்கைகள்:- 

1) 15%ஊதிய நிர்ணய பலனுடன் 3வது ஊதிய மாற்றத்தை அமலாக்கு!

2) BSNL நிர்வாகத்தின் முன்மொழிவின்படி BSNLக்கு 4G அலைக்கற்றையை ஒதுக்கீடு செய்!

3) 01.01.2017 முதல் BSNL ஓய்வூதியதாரருக்கு ஓய்வூதிய மாற்றத்தை அமல்படுத்து!

4) அரசு விதிகளின் படி மட்டுமே BSNL நிறுவனத்திடமிருந்து ஓய்வூதிய பங்களிப்பை பெற வேண்டும்!

5) 2வது ஊதிய மாற்றக்குழுவின் விடுபட்ட பரிந்துரைகளை அமலாக்கு!

6)அ) BSNLஇன் நில மேலாண்மை கொள்கைக்கு விரைவில் ஒப்புதல் வழங்கு!
ஆ) BSNLஉருவாக்கும் முன் மத்திய அமைச்சரவை எடுத்த முடிவின் படி BSNLக்கு அதன் சொத்துக்களை மாற்றிக்கொடுக்கும் செயலை விரைவு படுத்தி முடித்துக்கொடு! 

7) BSNL உருவாகும் போது அமைச்சர்களின் குழு எடுத்த முடிவின்படி BSNLஇன் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த BSNLக்கு பொருளாதார உதவிகளை வழங்கு! வங்கி கடன்களை பெறுவதற்கு தேவையான 'Letter of comfort'ஐ உடனே வழங்கு!

8) BSNLமொபைல் டவர்களை பராமரிக்க முன்மொழியப்பட்டுள்ள 'Outsourcing'ஐ கைவிடு!

தோழர்களே! தயாராகுவோம்!! நமது சேலம் மாவட்டத்தில் போராட்டத்தை வெற்றிகரமாக்க உடனடியாக பணிகளை துவக்குவோம். 

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்