தொலை தொடர்பு துறையின், கூடுதல் செயலாளரோடு 30.01.2019 நடைபெற்ற பேச்சு வார்த்தைக்கு பின் AUAB பிரதிநிதிகள் CMD BSNLஐ சந்தித்து விவாதித்தனர். மனிதவள இயக்குனரும் உடன் இருந்தார்.
BSNLன் புத்தாக்கம் தொடர்பாக தொலை தொடர்பு துறைக்கு ஒரு விளக்கத்தை BSNL CMD வழங்க உள்ளார். இந்த பின்னணியில் தொலை தொடர்பு துறையின் கூடுதல் செயலாளர் முன்மொழிந்த 5% ஊதிய நிர்ணய பலனுடன் கூடிய 3வது ஊதிய மாற்றம் என்பதை ஏற்றுக் கொள்ள இயலாது என AUAB தலைவர்கள் CMD BSNL இடம் தெரிவித்தனர்.
ஊழியர்களுக்கு 15% ஊதிய நிர்ணய பலனுடன் கூடிய ஊதிய மாற்றம் வழங்கப்பட வேண்டும் என BSNL CMDயை தலைவர்கள் வற்புறுத்தி உள்ளனர்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்