10-01-2019 அன்று தொலைத்தொடர்பு (DOT) துறையின் கூடுதல் செயலருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது., மூன்றாவது ஊதிய மாற்றம் பிரச்சனை குறித்து., AUAB தலைவர்கள் மீண்டும் ஒரு முறை BSNL நிர்வாகத்துடன் விவாதித்து பிறகு தன்னை வந்து சந்திக்குமாறு வழிகாட்டி இருந்தார். அதன் அடிப்படையில்., AUAB தலைவர்கள் 16-01-2019 அன்று நமது CMD அவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தையில் நிர்வாக தரப்பில்., இயக்குனர் (மனிதவளம்) மற்றும் AUAB தரப்பில்., BSNLEU, NFTE, SNEA, AIBSNLEA, AIGETOA, BSNLMS பொதுச் செயலர்கள், BSNLATM BSNLOA துணை பொதுச் செயலர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.
மூன்றாவது ஊதிய மாற்றம் தொடர்பாக விவாதம் நடைபெற்றது. விவாதத்தில்., 15% சதவீத ஊதிய நிர்ணய பலனுடன் மூன்றாவது ஊதிய மாற்றம் நடைபெற வேண்டும் என AUAB தலைவர்கள் உறுதிபட கோரினர்.
இதற்கு., நமது CMD அவர்கள் BSNL நிர்வாகமும் தனது முந்தைய நிலைப்பாடான 15% சதவீத ஊதிய நிர்ணயம் என்ற நிலைப்பாட்டில் இருந்து விலகாது என உறுதி அளித்தார்.
பாராளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியிடப் படலாம் என்பதையும்., மூன்றாவது ஊதிய மாற்றத்தை இறுதி செய்வதற்கு தேவையான காலம் மிக குறைவாக உள்ளதையும் AUAB தலைவர்கள் சுட்டிக்காட்டினர்.
ஊதிய மாற்றத்தில் சாதகமான உடன்பாடு எற்படவில்லை என்றால் போராட்டம் மீண்டும் வெடிக்கும் என AUAB தலைவர்கள் உறுதிபட தெரிவித்தனர்.
தோழமையுடன்,
E. கோபால்,
மாவட்ட செயலர்