நமது மாவட்டத்தில், 2016ல் LONGSTAY மாறுதலில் சென்ற தோழர்களை, மீண்டும் பழைய இடத்திற்கு கொண்டு வருவதற்கு மாவட்ட நிர்வாகத்தோடு நாம் கடந்த ஆறு மாத காலமாக பல கட்டப் பேச்சு வார்த்தை நடத்தினோம். நிர்வாகம் காலம் தாழ்த்துவதை மட்டுமே நிகழ்ச்சி நிரலாக வைத்திருந்தது.
இனியும் பொறுக்க முடியாது என முடிவு செய்து, மாவட்ட சங்க நிர்வாகிகள், கிளை செயலர்கள், பாதிக்கப்பட்ட தோழர்கள் ஆகியோரை திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தி, மாவட்ட பொது மேலாளரை நேரில் சந்தித்து பாதிக்கப்பட்ட தோழர்களோடு முறையீடு செய்ய திட்டமிட்டோம்.
அதன்படி, 22.01.2019 அன்று சேலம் மாவட்ட பொது மேலாளர் அலுவலகத்தில் நடைபெற்ற போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் தோழர் M . விஜயன் தலைமை தாங்கினார். மாவட்ட உதவி செயலர்கள் தோழர்கள் S . ஹரிஹரன், S . ராமசாமி, M . சண்முகம், மாவட்ட பொருளர் தோழர் P. தங்கராஜு ஆகியோர் கண்டன உரை வழங்கினார்கள்.
மாவட்ட செயலர் தோழர் E . கோபால், மாநில உதவி தலைவர் தோழர் S . தமிழ்மணி ஆகியோர் கண்டன சிறப்புரை வழங்கினார்கள்.
மாவட்ட அமைப்பு செயலர் தோழர் P . செல்வம், ஆர்ப்பாட்ட கோஷங்களை எழுப்ப, GM அலுவலக கிளை செயலர் தோழர் N . பாலகுமார் நன்றி கூறி போராட்டத்தை முடித்து வைத்தார்.
பின்னர் தோழர்களோடு திரளாக சென்று, PGM அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினோம். நடைபெற்ற பேச்சு வார்த்தையில், முன்னேற்றம் காணப்பட்டது.
பிரச்சனைக்கு தீர்வு காண இன்று, 24.01.2019 நமது கோரிக்கை மீதான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் துவங்கி விட்டது.
நமது போராட்டத்திற்கு வெற்றி கிட்டியுள்ளது.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்