வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்களில் வர்த்தகம் முடங்கியது
பொதுத்துறை நிறுவனங்கள்
அதன் ஒரு பகுதியாக சென்னையில் பொதுத்துறை வங்கிகள், காப் பீடு, தபால், வருமானவரி, கலால், ஜிஎஸ்டி உள்ளிட்ட பல்வேறு மத்திய அரசு அலுவலகங்களும் பொதுத் துறை எண்ணை நிறுவனங்களிலும் பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டன. மாநில அரசு ஊழியர்களும் வேலைநிறுத்தத்தில் கலந்து கொண்டதால் வருவாய்த்துறை, ஆதிதிராவிடர் நலத் துறை, ஊரக வளர்ச்சி, மக்கள் நல் வாழ்வு, கருவூலத்துறை, வணிகவரித்துறை உள்ளிட்ட அனைத்துதுறைகளிலும் ஊழியர்கள் முழுமையாக வேலைநிறுத்தத்தில் பங்கேற் றுள்ளனர்.
ஆலை வாயில்களில் ஆர்ப்பாட்டம்
வேலைநிறுத்த கோரிக்கைகளை விளக்கி ஆலை வாயில்களிலும் ஆர்ப்பாட்டங்கள், தர்ணா போராட் டங்கள் நடைபெற்றன.சென்னையில் அம்பத்தூர், திருவொற்றியூர், கிண்டி, பெருங்குடி, மணலி, திருப்பெரும் புதூர் உள்ளிட்ட தொழிற்பேட்டைகளிலும் வேலைநிறுத்தம் வெற்றிபெற் றுள்ளது. பெரும்பான்மையான ஆட்டோ ஓட்டுநர்கள், லாரி ஓட்டுநர் கள், கால் டாக்சி ஓட்டுநர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர்.கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு, தொமுச, ஏஐடியுசி உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் மாநிலம் முழுவதும் சாலை போராட்டங்களும், ஆர்ப்பாட்டங் களும் நடைபெற்றன. விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் சார்பில் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
வங்கி, இன்சூரன்ஸ் ஊழியர்கள்
சென்னையில் வங்கி ஊழியர் கூட்டமைப்பு, யுனைட்டெட் இந்தியா இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் சார்பில் அண்ணாசாலையில் உள்ள யுனைட் டெட் இந்தியா இன்சூரன்ஸ் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வங்கி கூட்டமைப்பு நிர்வாகிகள் சி.எச்.வெங்கடசாலம், சி.பி.கிருஷ்ணன், ஆனந்த் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஊழியர்களும் அதிகாரிகளும் பங்கேற்பு
இரண்டு நாள் வேலைநிறுத்தத்தில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள கலால் துறை, ஜிஎஸ்டி துறையில் பணிபுரியும் அரசிதழ் பதிவுபெற்ற அதிகாரிகளும் கண்காணிப்பாளர்களும் பங்கேற்றுள்ளனர். காலிப்பணி யிடம், பழைய ஓய்வூதியத்திட்டம் உள்ளிட்ட தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டு நாள் தர்ணாபோராட்டத்திலும் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.நுங்கம்பாக்கத்திலுள்ள வருமானவரித் துறை அலுவலகத்தில் ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொதுச் செயலாளர் வெங்கடேசன், மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளன பொதுச் செயலாளர் எம்.துரைபாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நுங்கம்பாக்கம் கலால் வரித்துறை அலுவலக வளாகத்தில் அகில இந்திய மத்திய கலால் துறை, அரசிதழ் பதிவுபெற்ற நிர்வாக அதிகாரிகள் சங் கத்தின் சார்பில் நடந்த ஆர்ப்பாட் டத்தில் சுந்தரமூர்த்தி, சங்கத்தின் பொதுச் செயலாளர் டைடஸ் சாமுவேல், தலைவர் என்.வெங்கடேசன், பொருளாளர் என்.நவீன், துணைத் தலைவர் சரவணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். சென்னை அண்ணாசாலையிலுள்ள தலைமை அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க தென்மண்டல துணைத் தலைவர் கே.சுவாமிநாதன், சென்னை காப்பீட்டு ஊழியர் சங்க பொதுச் செயலாளர் எஸ்.ரமேஷ்குமார், தலைவர் ஜெயராமன் உள்ளிட்டோர் பேசினர்.
ஓய்வுபெற்றோர்
தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஊழியர் சங்கங்களின் போராட்டக்குழு சார்பில் சென்னை எழிலகத்தில் மாவட்டத் தலைவர் ச.டேனியல் ஜெய்சிங் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பொதுச்செயலாளர் மு.அன்பரசு, பொருளாளர் தங்கராஜ், நெ.இல.சீதரன் (ஓய்வூபெற்றோர் சங்கம்) அந்தோனிசாமி, பட்டாபி, வெங்கடேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.டாஸ்மாக் ஊழியர்கள் அனைத்து தொழிற்சங்கத்தினர் எழும்பூரில் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் திருச்செல் வம், சரணவன் (சிஐடியு), ந.பெரியசாமி, மணிகண்டன் (ஏஐடியுசி), டில்லிபாபு (டிஎன்ஜிடிஇயு), கண்ணன் (தொமுச), ராமசந்திரன் (விடுதலை முன்னணி) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அனைத்து ஆட்டோ சங்க கூட்டமைப்பு சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நடராஜன் (தொமுச), எஸ்.கே.மகேந்திரன், எஸ்.பாலசுப்பிரமணியம், எம்.சந்திரன், ஏ.எல்.மனோகரன் (சிஐடியு), க.சுந்தரம், மு.சம்பத் (ஏஐடியுசி), அமெரிக்க நாராயணன் (இனோடா) உள்ளிட்ட 12 சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
சாலை மறியல்
சிஐடியு, ஏஐடியுசி, ஏஐசிசிடியு, ஐஎன்டியுசி சார்பில் அம்பத்தூர் தொழிற்பேட்டை தொலைபேசி நிலையம் அருகே நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் பங்கேற்ற சி.திருவேட்டை, பி.என்.உண்ணி, சு.பால்சாமி (சிஐடியு), பி.மாரியப்பன், ஆர்.துரைசாமி (ஏஐடியுசி), தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநிலச் செயலாளர் கே.ரவிச்சந்திரன், டி.கே.சம்பத்ராவ், ஏஐசிசிடியு மாநிலச் செயலாளர் முனுசாமி உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர்.