Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Friday, February 15, 2019

3வது ஊதிய மாற்றத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள்

Related image


கடந்த இரண்டு நாட்களாக BSNL CMD அவர்களும், மனித வள இயக்குனரும் AUAB தலைவர்களுடன் தொடர்ந்து வேலை நிறுத்த கோரிக்கைகள் சம்மந்தமாக பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். குறிப்பாக, 3வது ஊதிய மாற்றம் தொடர்பான DoTயின் முன்மொழிவுகளை நமக்கு தெரிவித்து வருகின்றனர். அதன் படி 0% ஊதிய நிர்ணய பலனுடன் ஊதிய மாற்றம் உடனடியாக அமலாக்கப்படும். அதன் பின் 5% ஊதிய நிர்ணய பலனுக்காக, தொலை தொடர்பு அமைச்சர், மத்திய அமைச்சரவைக்கு கொண்டு செல்வார். 

இது தொடர்பாக அனைத்து பொதுச் செயலாளர்களுடனும் AUAB தலைவர்கள் விவாதித்து, 10% ஊதிய நிர்ணய பலன் தான் நமது குறைந்தபட்ச கோரிக்கை என ஏகமனதாக முடிவெடுக்கபட்டுள்ளது. இதனை BSNL CMD மூலமாக DoTக்கு தெரிவித்துள்ளோம். 

0% ஊதிய நிர்ணயபலன் தான் ஊதிய மாற்றத்திற்கு வழங்குவார்கள் என்பதையே, DoTயின் முன்மொழிவிலிருந்து BSNL ஊழியர் சங்கம் புரிதலுக்கு வந்துள்ளது. 5% ஊதிய நிர்ணய பலனுக்கு மத்திய அமைச்சரவைக்கு கொண்டு செல்வேன் என்கிற மத்திய தொலை தொடர்பு அமைச்சரின் வாக்குறுதியை நம்ப முடியாது. மத்திய அமைச்சரும், DoTயும் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் மீறினார்கள் என்பது தான் கடந்த கால அனுபவங்கள். 

எனவே 18.02.2019 முதல் நடைபெற உள்ள வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்கிட அனைத்து தயாரிப்பு பணிகளையும் நமது அனைத்து தோழர்களும் முழு வேகத்தில் கொண்டு செல்ல வேண்டும் என மத்திய சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது. ஏதாவது முன்னேற்றங்கள் இருந்தால் உடனடியாக தோழர்களுக்கு தெரிவிக்கப்படும் என மத்திய சங்கம் தெரிவித்துள்ளது.

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்