ஊதிய மாற்றத்திலிருந்து ஓய்வூதிய மாற்றத்தை தனியாக பிரிக்கும் மத்திய அமைச்சரின் உறுதி மொழியிலிருந்து தற்போது விலகிச் செல்வதற்கு AUAB எதிர்ப்பு
AUAB மற்றும் மத்திய தொலை தொடர்பு அமைச்சர் ஆகியோருக்கு இடையே 03.12.2018 அன்று நடைபெற்ற சந்திப்பின் போது, ஊதிய மாற்றத்திலிருந்து ஓய்வூதிய மாற்றத்தை தனியாக பிரிப்பது என உறுதியளிக்கப்பட்டது. எனினும் DoTயில் உள்ள அதிகாரிகள் அந்த உறுதி மொழியிலிருந்து விலக முயற்சிக்கின்றனர்.
உதாரணமாக, DoTயிலிருந்து ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர் நல இலாக்காவிற்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், மத்திய அமைச்சரின் முடிவு நீர்த்து போகும் வண்ணம் இருக்கிறது. அந்தக் கடிதத்தில் ஊதிய மாற்றத்திலிருந்து ஓய்வூதிய மாற்றத்தை தனியாக பிரிக்க முடியுமா என DoP&PW இடம் விளக்கம் கேட்டுள்ளது.
30.01.2019 அன்று தொலை தொடர்பு துறையின் கூடுதல் செயலாளரோடு நடைபெற்றக் கூட்டத்தில் கூட DDG (Estt), DoT, ஊதிய மாற்றத்திற்கு பின்னர் தான் ஓய்வூதிய மாற்றம் செய்ய முடியும் என வாதிட்டார். இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த AUAB தலைவர்கள், மத்திய அமைச்சரின் உறுதிமொழி அமலாக்கப்பட வேண்டும் என கடுமையாக வாதிட்டனர்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட பின் தொலை தொடர்பு துறையின் கூடுதல் செயலாளர், AUAB மற்றும் DDG(Estt) DoT ஆகியோர் இது தொடர்பாக மேலும் விவாதிக்க வழிகாட்டினார். அதன் அடிப்படையில் அந்த சந்திப்பு நடைபெற்றது.
ஊதிய மாற்றத்திலிருந்து ஓய்வூதிய மாற்றத்தை பிரிப்பது என்ற மத்திய அமைச்சரின் முடிவு அமலாக்கப்பட வேண்டுமென AUAB தலைவர்கள் உறுதிபட தெரிவித்தனர். இந்தக் கடும் எதிர்ப்பை கவனித்த DoTயின் DDG(Estt.), திரு S.K.ஜெயின் அவர்கள் இந்த பிரச்சனை தொலை தொடர்பு துறையின் கூடுதல் செயலாளருடன் மேலும் விவாதிப்பதாக உறுதி அளித்துள்ளார்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்