கடந்த தேசிய கவுன்சிலில் இந்த பிரச்சனை விவாதிக்கப்பட்ட போது, தேசிய கவுன்சிலின் தலைவராக உள்ள மனிதவள இயக்குனர் சாதகமாக பரிசீலிப்பதாக ஏற்றுக் கொண்டார். எனவே 10.01.2019 அன்று இது தொடர்பாக மீண்டும் மனித வள இயக்குனரிடம் விவாதிக்கப்பட்டது. எனினும், JE இலாகா தேர்வை OFF LINE மூலம் நடத்துவதாக இதுவரை எந்த ஒரு கடிதத்தையும் கார்ப்பரேட் அலுவலகம் வெளியிடவில்லை.
நமது பொதுசெயலாளர் தோழர் P.அபிமன்யு அவர்கள், 08.02.2019 அன்று GM(Rectt) திருமிகு சமிதா லூத்ரா அவர்களை சந்தித்து விவாதித்தார். இந்த பணியினை விரைவு படுத்துவதாக அவர் உறுதி அளித்துள்ளார்.
இதன் தொடர்ச்சியாக, 07.02.2019 முதல் ONLINE முறையில் விண்ணப்பிக்க வேண்டிய நடவடிக்கையை ஒத்தி வைத்து, கார்ப்பரேட் அலுவலகம் உத்தரவு வெளியிட்டுள்ளது.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
உத்தரவு காண இங்கே சொடுக்கவும்