BSNL நிறுவனத்தை லாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்ற, வாடிக்கையாளர் மகிழ்விப்பு ஆண்டு, புன்னகையுடன் சேவை, BSNL உங்கள் இல்லம் தேடி, என பல இயக்கங்களை AUAB சார்பாக நாம் நடத்தியுள்ளோம். ஊழியர்கள், அதிகாரிகள் இணைந்த ஒன்றுபட்ட களப் பணி காரணமாக தான் பல நெருக்கடிகளை சமாளித்து BSNL இன்றும் நிலைத்து நிற்கின்றது.
ஆனால், அதிகாரிகள், ஊழியர்கள் ஒன்றிணைந்து எந்த ஒரு கூட்டு இயக்கத்தையும் நடத்தக் கூடாது என கார்ப்பரேட் நிர்வாகம் நினைப்பது போல், அதன் நடவடிக்கைகள் அமைந்துள்ளது. நடந்து முடிந்த வெற்றிகரமான 3 நாள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டதற்காக, அதிகாரிகள் சங்க தலைவர்களை குறி வைத்து, நிர்வாகம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க துவங்கியுள்ளது.
Show -cause நோட்டிஸ்கள் வழங்கி, மிரட்டுகிறது. அதிகாரிகளை பழி வாங்க, கார்ப்பரேட் நிர்வாகம் சதித்திட்டம் தீட்டியுள்ளது.
இது அதிகாரிகள் - ஊழியர்கள் ஒற்றுமையை சீர்குலைக்க எடுக்கப்படும் நடவடிக்கையாக தான் பார்க்க முடிகிறது. இதை நாம் அனுமதிக்கக் கூடாது. நாளை, 07.03.2019 நடைபெறும் AUAB கூட்டத்தில், நிர்வாகத்தின் இத்தகைய போக்கை தவிடு பொடியாக்க ஒன்று பட்ட இயக்கங்களை நடத்த திட்டமிடுவோம்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
தகவல்: மத்திய சங்க இணையம்