BSNLல் பணிபுரியும் அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும், 2019 பிப்ரவரி மாத சம்பளம் இன்னும் பட்டுவாடா செய்யப்படவில்லை. "பணம் இல்லை" என டில்லி நிர்வாகம் காரணம் கூறுகிறது. நிதி நெருக்கடியை சமாளிக்க வங்கிகளில் கடன் பெற வேண்டும். ஆனால், DoT வங்கி கடன் பெற அனுமதி மறுக்கிறது. தனியார் நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில், BSNL கடன் சுமை சிறிய தொகைதான். இருப்பினும் DoT அனுமதி மறுப்பதை கூர்ந்து கவனித்தால் அரசாங்கத்தின் சதி திட்டம் தெளிவாக புரிகிறது. அது என்னவென்றால், சம்பளம் வழங்காமல் காலம் தாழ்த்தி, ஊழியர்களிடையே பீதி ஏற்படுத்தி, அவர்களாகவே விருப்ப ஓய்வில் செல்ல நிர்பந்திப்பதுதான் அரசின் திட்டம்.
ஏற்கனவே, விருப்ப ஓய்வு திட்டத்தை அரசாங்கம் தீவிரமாக பரிசீலிப்பதாக, ஊடகங்களில் செய்தி வெளி வந்து கொண்டு இருக்கிறது. ஊழியர்களின் எண்ணிக்கையை பெரிய அளவில் குறைத்து, அதன் மூலம், BSNL நிறுவனத்தை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்க்க அரசாங்கம் நினைக்கிறது. அரசாங்கத்தின் இந்த சதியை சரியாக புரிந்து கொள்வோம். ஒன்றுபட்ட போராட்டங்கள் மூலம், அரசின் சித்து விளையாட்டை முறியடிப்போம்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
தகவல்: மத்திய சங்க இணையம்.