ஊதியத்திற்கான நிதியை ஒதுக்கியது மாநில நிர்வாகம்
நம்மோடு பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பல மாத சம்பளம் வழங்காமல் நிர்வாகம் காலம் தாழ்த்தியது. அதனால், அவர்களின் குடும்பங்கள் பட்டினியால் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டது. ஊதியம் இல்லையென்றாலும் BSNLஇன் நிலையை எண்ணி உழைத்த அந்த ஒப்பந்த தொழிலாளிகளை நிர்வாகம் கண்டுகொள்ளவேயில்லை. இனியும் பொறுக்க முடியாது., செய்த வேலைக்கு ஊதியம் கேட்டு காத்திருப்பு போராட்டம் நடத்த BSNLEU -TNTCWU இரண்டு மாநில சங்கங்கள் அறைகூவல் கொடுத்திருந்தது.
அதனடிப்படையில், நடைபெற்ற நமது உறுதியான போராட்டத்தின் காரணமாக, 02.04.2019 அன்று ஒப்பந்த ஊழியர் ஊதியத்திற்காக 9 கோடி ரூபாய் நிதி வழங்கப்படும் என இன்று, (01.04.2019) நமது மாநில செயலரை அழைத்து பேசி, மாநில நிர்வாகம் உறுதி அளித்துள்ளது.
இது நமது முழுமையான தேவையை பூர்த்தி செய்யாது. எனினும் இன்றுள்ள சூழ்நிலையில் இது மிக பெரிய வெற்றி. இந்த வெற்றி, நமது போராட்டத்தால் கிடைத்த வெற்றி. பெற்ற வெற்றியை பாதுகாப்போம். ஒப்பந்த ஊழியர்கள் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து போராடுவோம்.
போராட்டத்தை தற்போதைக்கு ஒத்திவைப்போம் என மாநில சங்கங்கள் முடிவு எடுத்துள்ளன. ஏற்படும் முன்னேற்றங்களை வைத்து, அடுத்த கட்ட இயக்கத்தை திட்டமிடுவோம்.
வாழ்த்துக்களுடன்,
E. கோபால்,
மாவட்ட செயலர்