BSNLன் தனியார்மயமாக்கலின் வழியே VRS
BSNLன் பொருளாதார நெருக்கடிக்கு VRS மருந்தல்ல. MTNL நிறுவனத்தில் ஏற்கனவே இரண்டு முறை விருப்ப ஓய்வுத் திட்டம் அமலாகியுள்ளது. இன்னமும் கழுத்தளவு சிக்கலில் MTNL உள்ளது. தனது நெருக்கடியிலிருந்து MTNL வெளியே வருவதற்கு ஏன் VRS உதவவில்லை? இந்த கேள்விக்கு அரசாங்கத்தால் பதிலளிக்க முடியுமா? எதிர்காலத்தில் BSNLஐ தனியார் மயப்படுத்த, அதனை அழகுறச் செய்வதற்கு ஊழியர்களின் எண்ணிக்கையை குறைப்பதுவே இந்த VRS திட்டத்தை அரசு அமலாக்குவதற்கான முழுமையான நோக்கம். VRS அமலாக்கம் என்பது BSNLஐ தனியார்மயப்படுத்துவதுவே தவிர வேறு எதுவும் இல்லை. அரசின் VRS திட்டத்தை ஆதரிக்கும் இளைய தோழர்கள் இதனை புரிந்துக் கொள்ள வேண்டும்.
BSNL நிறுவனத்தின் புத்தாக்கத்தை தடுக்கும் அரசின் திட்டமே VRS
BSNL நிர்வாகம் முன்மொழிந்துள்ள நில மேலாண்மை திட்டத்தின் மூலம் வரும் வருவாயை BSNLன் வளர்ச்சிக்கும் புத்தாக்கத்திற்கும் பயன்படுத்த முடியும் என்பதால் அதற்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என BSNLல் உள்ள அனைத்து சங்கங்களும் கோரி வருகின்றன. ஆனால் அந்த நிலங்களின் மூலம் வரும் வருவாயை BSNLன் வளர்ச்சிக்கு பயன் படுத்தமுடியாதபடி செய்ய அரசு திட்டம் தீட்டி உள்ளது. அந்த பணத்தை VRSக்கு பயன்படுத்திக் கொண்டு BSNLன் வளர்ச்சியை தடை செய்வதற்கான அரசின் திட்டமிட்ட சதி இது.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
தகவல்: மத்திய மாநில சங்க இணையங்கள்