14.04.1891 - 06.12.1956
BSNL ஊழியர் சங்கம் ஒவ்வொரு ஆண்டும் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி வருகிறது. அவர் இந்திய அமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர் என்பதோடு சமூக கொடுமைகளுக்கு எதிராக போராடிய கடுமையான போராளியுமாவர்.
2019, ஏப்ரல் 6 மற்றும் 7ஆம் தேதிகளில் காசியாபாத்தில் நடைபெற்ற BSNL ஊழியர் சங்கத்தின் மத்திய செயற்குழு, இந்த ஆண்டு அம்பேத்கர் ஜெயந்தியை சிறப்பாக கொண்டாட வேண்டுமென கேட்டுக்கொண்டது.
இந்த நிகழ்ச்சியை கிளை சங்கங்கள் சிறப்பாக கொண்டாடுமாறு கேட்டுக்கொள்கிறோம். படங்கள், மற்றும் செய்திகளை மாவட்ட சங்கத்திற்கு அனுப்பவும்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்