BSNL நிறுவனத்தின் புத்தாக்கம் என்ற பெயரில் BSNL லில் பணிபுரியக்கூடிய ஊழியர்கள், அதிகாரிகளை வீட்டிற்கு அனுப்பும் ஏற்பாடாக விருப்ப ஓய்வு திட்டத்தை, (VRS) அமுலாக்க தொலைத்தொடர்பு துறையும், BSNL நிர்வாகமும் அவசர அவசரமாக சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இதனை எதிர்த்து 12.04.2019 அன்று நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த BSNLEU , NFTEBSNL , AIBSNLEA ,BSNLMS, BSNLATM , TEPU, BSNLOA ஆகிய சங்கங்கள் கூட்டாக அறைகூவல் கொடுத்துள்ளன. 09.04.2019 தேதியிட்ட கடிதம் மூலம் மத்திய அரசாங்கத்திற்க்கும், BSNL CMD அவர்களுக்கும் கூட்டாக போராட்ட திட்டத்தை தெரியப்படுத்தி, நமது கண்டனத்தையும் பதிவு செய்துள்ளனர்.
இதன் அடிப்படையில், சேலம் மாவட்ட BSNLEU , NFTEBSNL , SNEA, AIBSNLEA , TEPU, TNTCWU மாவட்ட சங்கங்கள் சார்பாக கிளைகளில், 12.04.2019 அன்று சக்திமிக்க ஆர்ப்பாட்டம் நடத்த தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
கூட்டாக இயக்கம் நடத்தி, மத்திய அரசின் சதி திட்டத்தை முறியடிப்போம். ஊழியர்கள், அதிகாரிகள் மற்றும் நிறுவனத்தை காப்போம்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
மத்திய சங்கங்கள் கூட்டு பிரகடனம் ஆங்கிலம் தமிழ் காண இங்கே சொடுக்கவும்
AUAB தமிழ் மாநில முடிவுகள் காண இங்கே சொடுக்கவும்
குறிப்பு: சேலம் நகர கிளைகள் சார்பாக, 12.04.2019 மாலை 5.30 மணி அளவில், சேலம் MAIN தொலைபேசி நிலையம் முன்பு கூட்டு போராட்டம் நடைபெறும்.