Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Saturday, May 11, 2019

சொசைட்டி முற்றுகை போர்



ஊழலின் ஒட்டு மொத்த அடையாளமாக சென்னை கூட்டுறவு சங்கம் மாறி, பல மாதங்களாக தனி நபர்க்கடனுக்கு விண்ணப்பித்து காத்திருக்கும் நிலை நீடிக்கிறது. ஓய்வு பெற்ற ஊழியரின் கணக்குகளை முழுமை செய்து அவர்களது கணக்கில் சேரவேண்டிய பணம் செலுத்துவதில்லை. ஒரு பகுதி நிலம் விற்கப்பட்டதாக சொல்கிறார்கள்.

இப்படி பட்ட அவலங்களை கண்டித்து, BSNLEU தமிழ் மாநில சங்கம், 09.05.2019 அன்று கூட்டுறவு சங்க கிளைகள் (கோவை, திருச்சி, சேலம், மதுரை) முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த அறைகூவல்  கொடுத்திருந்தது. அதன்படி, சேலம் சொசைட்டி கிளை முன்பு, 09.05.2019 அன்று, சேலம் மற்றும் தர்மபுரி மாவட்ட சங்கங்கள் சார்பாக பெருந்திரள்ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

போராட்டத்திற்கு மாவட்ட தலைவர்கள் தோழர் M . விஜயன், (சேலம்), D. பாஸ்கரன் (தர்மபுரி) கூட்டு தலைமை தாங்கினர். BSNLEU தமிழ் மாநில உதவி தலைவர் தோழர் S  தமிழ்மணி, போராட்டத்தை துவக்கி வைத்து துவக்க உரை வழங்கினார். மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர் T. கந்தசாமி, P. கஜபதி (தர்மபுரி), S . ஹரிஹரன், P . தங்கராஜ்(சேலம்) ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.

BSNLEU தர்மபுரி மாவட்ட செயலர் தோழர் P . கிருஷ்ணன், சேலம் மாவட்ட செயலர் தோழர் E . கோபால் ஆகியோர் கண்டன சிறப்புரை வழங்கினார்கள். 

சேலம் GM அலுவலக கிளை செயலர் தோழர் N . பாலகுமார் நன்றி கூறி ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்தார். போராட்டத்திற்கு வந்திருந்த 100க்கும் மேற்பட்ட தோழர்களோடு சொசைட்டி அலுவலகத்திற்குள் சென்று அலுவலகத்தை முற்றுகையிட்டோம். 

அங்கிருந்த கிளை மேலாளர் நாம் எழுப்பிய கேள்விகளுக்கு முதலில் மழுப்பலான பதில்கள் தந்தார். அவரை விடாமல் புள்ளி விவரங்களுடன் கேள்வி கணைகளை தொடுத்தவுடன் சரண்டர் ஆனார். 

ஆம், பல மாதங்களாக, சிலரின் தூண்டுதல் பேரில், பராபட்சமாக சாதாரண கடன் வழங்கி வந்துள்ளார். வேண்டியவர்களுக்கு உடனடியாக கடன், சாதாரண உறுப்பினர்கள் மாத கணக்கில் காத்து கிடப்பது ஆவணங்கள் மூலம் வெளிச்சத்துக்கு வந்தது. 

வேண்டப்பட்டவர்களுக்கு உடனடியாக கணக்கு முடிக்கப்படும். அப்பாவி உறுப்பினர்கள் மாத கணக்கில் காத்து கிடப்பதை நாம் கண்டு பிடித்தோம். ஆடம்பர, ஊதாரி செலவுகள் பூர்வாங்கமாக உணர முடிந்தது. 

சாதாரணமாக நாம் கூப்பிட்டால், சென்னையில் உள்ள கூட்டுறவு சங்க செயலர் போனை எடுக்க மாட்டார். கிளை மேலாளர் போனில் இருந்து அழைத்தவுடன் அழைப்புக்கு  பதில் அளித்தார். அவரிடத்தில், இந்த அவலங்களை சுட்டி காட்டி, சரமாரியாக கேள்விகள் கேட்டவுடன், உண்மையை அவரும் ஒப்பு கொண்டார். 

தொடர்ச்சியாக நடைபெற்ற பேச்சு வார்த்தைக்கு பின், இனி சேலம் கிளையில் மூப்பு அடிப்படையில் அனைத்து நடவடிக்கைகளும் இருக்கும். நிலுவையில் உள்ள சாதாரண கடன், கணக்கு முடித்தல் விண்ணப்பங்கள் விரைந்து பரிசீலித்து நிதி அடிப்படையில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என செயலரும் கிளை மேலாளரும் உறுதி அளித்தனர். 

இரண்டு மாவட்ட சங்கங்களும் அனைத்து நடவடிக்கைகளையும் குறிப்பிட்ட கால இடைவேளையில் ஆய்வு செய்யவும் ஏற்பாடு செய்வதாக சொசைட்டி நிர்வாகம் உறுதி அளித்தது. 

குறிகிய கால அவகாசத்தில், போராட்ட அறைகூவல் கொடுத்தும், திரளாக வந்த தோழர்களை இரண்டு மாவட்ட சங்கங்கள் சார்பாக பாராட்டுகிறோம். நெஞ்சு நிறை நன்றி. 

தோழமையுடன்,

E . கோபால்,
மாவட்ட செயலர்