Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Thursday, May 2, 2019

ஒப்பந்த ஊழியர்களுக்கு முறையாக சம்பளம் வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் !



மாநில சங்கங்கள் அறைகூவலுக்கிணங்க , ஒப்பந்த ஊழியர்களின் பிரச்சனைகளை மையப்படுத்தி, 27.04.2019, அன்று சேலம் பொது மேலாளர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநிலம் முழுவதும்  ஒப்பந்த தொழிலாளர்களின் சம்பளப் பிரச்னை தீவிரமடைந்துள்ளது.  பல மாவட்டங்களில் 4 மாதச் சம்பளம் நிலுவையில் உள்ளது,  சம்பளம் வழங்கிட பல்வேறு மட்டங்களில் பேச்சு வார்த்தை நடத்தியும் தீர்வு ஏற்படததால் மறுபடியும் போராட்டத்தில் ஈடுபடுவதென மாநிலச் சங்கங்கள் முடிவு எடுத்து இந்த போராட்ட அறைகூவலை கொடுத்திருந்தார்கள்.    

மாநில அளவிலான கோரிக்கைகளோடு, சேலம் மாவட்ட கோரிக்கைகளான Exserviceman Security Service ஒப்பந்ததாரர் திறனுக்கேற்ற ஊதியம் வழங்காமல்  5 மாதங்களாக (நவம்பர், டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி, மார்ச், மாதங்களில்) குறைந்த கூலி வழங்கி வருகிறார். நிலுவை வழங்க வலியுறுத்தியும், House keeping தோழர்களுக்கு, நேஷனல் செக்யூரிட்டி மற்றும் 
புதுக்கோட்டை  ராஜா, 3 மாத ஊதியம் மற்றும் ஆறு மாத போனஸ் நிலுவை வழங்க வலியுறுத்தியும், STR மற்றும் CIVIL பகுதிகளில் திறனுக்கேற்ற கூலிமாற்றத்தை வலியுத்தியும், ஒப்பந்ததாரர் ராஜா மற்றும் கோபால் கேபில் பகுதியில்  பனியற்றும் தோழர்களுக்கு, மார்ச்  மாதம் ஊதியம் வழங்க வழியுறுத்தியும், இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

போராட்டத்திற்கு TNTCWU மாவட்ட தலைவர் தோழர் K . ராஜன் தலைமை தாங்கினார். TNTCWU மாநில உதவி செயலர் தோழர் C . பாஸ்கர் துவக்கவுரை வழங்கினார். BSNLEU மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள் S . ஹரிஹரன், P . தங்கராஜு, M . சண்முகம் கருத்துரை வழங்கினார்கள். 

TNTCWU சேலம் மாவட்ட செயலர் தோழர் M . செல்வம், BSNLEU சேலம் மாவட்ட செயலர் தோழர் E . கோபால் கண்டன சிறப்புரை வழங்கினார்கள். 

TNTCWU மாவட்ட பொருளர் தோழர் P . செல்வம் நன்றி கூறி போராட்டத்தை முடித்து வைத்தார். பின்னர், ஊழியர்களின் கோரிக்கை மகஜரோடு மாவட்ட நிர்வாகத்தை சந்தித்தோம். DGM(HR/ADMN) , AGM(HR/ADMN) ஆகியோரை ஒப்பந்த தொழிலாளர்களோடு சென்று சந்தித்து கோரிக்கைகளை விவாதித்தோம். நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க உறுதி அளித்துள்ளது. 

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்