Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Tuesday, May 14, 2019

போராடாமல் பெற்றதில்லை! போராடி தோற்றதில்லை!!

Related image
உண்ணாவிரத போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி!
மத்திய சங்கத்தின் முயற்சியும் பலனை பெற்று கொடுத்தது!!. 

கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல், 13.5.19 முதல், சென்னை தலைமை பொது மேலாளர் அலுவலகத்தில், BSNLEU - TNTCWU தமிழ் மாநில சங்க நிர்வாகிகள் உண்ணாவிரத போராட்டம் மேற் கொன்டனர். நாடு முழுவதும் ஒப்பந்த ஊழியர்களுக்கு கடந்த நான்கு/ஐந்து மாதங்களாக ஊதியம் கிடைக்காமல் உள்ள பிரச்சனையை BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் P.அபிமன்யு அவர்கள் 13.05.2019 அன்று DIRECTOR(FINANCE) அவர்களிடம் விவாதித்தார். அதன் அடிப்படையில் இன்று, (14.05.2019) நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களுக்கும் 30% நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நேற்றும், இன்றும் மாநில சங்கம் தொடர்ந்து மாநில நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தை நடத்தி வந்தது. 

அதன் காரணமாக, தமிழ் மாநில நிர்வாகம், House Keeping கிற்கு 4.3 கோடி ரூபாய்கள் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது என்பதை மகிழ்சியுடன் தெரிவித்து கொள்கிறொம். மாநில சங்கங்களின் போராட்ட இயக்கத்தாலும், மத்திய சங்கத்தின் சீரிய தலையிட்டாலும், இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 

உண்ணாவிரத போராட்டம் நடத்திய BSNLEU - TNTCWU மாநில சங்க நிர்வாகிகளுக்கும், மத்திய சங்கத்திற்கும் சேலம் மாவட்ட சங்கங் கள்  தனது நன்றிகளையும் பாராட்டுகளையும் உரித்தாக்கி கொள்கிறது. 

15.5.19 பெருந்திரள் முற்றுகை போர் ஒத்திவைக்கபடுகிறது.

போராடாமல் பெற்றதில்லை!
போராடி தோற்றதில்லை!!

தோழமையுடன், 
E. கோபால், BSNLEU 
M. செல்வம்,TNTCWU 
மாவட்ட செயலர்கள்
சேலம்