ஐந்து மாத காலமாக ஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பளம் வழங்காததை கண்டித்து, ஒப்பந்த ஊழியர்களை திரட்டி, பெருந்திரள் முறையீடு போராட்டம் நடத்த BSNLEU - TNTCWU இரண்டு மாநில சங்கங்களும் அறைகூவல் கொடுத்திருந்தனர்.
அதன்படி, இன்று, 08/05/2019 சேலம் PGM அலுவலகம் முன்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு தோழர் P . செல்வம், மாவட்ட உதவி தலைவர், TNTCWU தலைமை தாங்கினார்.
தோழர் C . பாஸ்கர், மாநில உதவி செயலர் TNTCWU போராட்டத்தை துவக்கி வைத்து துவக்கவுரை வழங்கினார். BSNLEU மாவட்ட தலைவர் தோழர் M . விஜயன், மாவட்ட உதவி செயலர் தோழர் S . ஹரிஹரன், ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
TNTCWU சேலம் மாவட்ட செயலர் தோழர் M . செல்வம், BSNLEU சேலம் மாவட்ட செயலர் தோழர் E . கோபால், ஆகியோர் கண்டன சிறப்புரை வழங்கினார்கள்.
ஆர்ப்பாட்ட கோஷங்களை TNTCWU மாவட்ட உதவி செயலர் தோழர் M . சண்முகம் எழுப்ப, BSNLEU GM அலுவலக கிளை செயலர் தோழர் N. பாலகுமார் நன்றி கூறி போராட்டத்தை முடித்து வைத்தார். நூற்றுக்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
அவர்களை அப்படியே அழைத்து கொண்டு உயர்த்திரு. S . சபீஷ், PGM அவர்களை சந்தித்தோம். திரு. முத்துசாமி, DGM(F), அவர்களும் உடன் இருந்தார். ஒப்பந்த ஊழியர்களின் கோரிக்கை மகஜரை வழங்கி, அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியை விளக்கினோம் . நம்முடைய கோரிக்கைகளை பொறுமையாக கேட்ட PGM உடனடி நடவடிக்கைகளை எடுக்க உறுதி அளித்தார்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்