Site Maintained by S. HARIHARAN, District Secretary

Thursday, June 20, 2019

ஒப்பந்த ஊழியர் சம்பள பிரச்சனை மற்றும் ஆட்குறைப்பு நடவடிக்கைக்கு எதிராக மாலை நேர தர்ணா!


ஒப்பந்த ஊழியர் சம்பளப் பிரச்சினை தீராத பிரச்சனையாக, கடந்த ஒரு வருடமாக நீடித்து வருகிறது. இந்நிலையில், சுமார் 30% ஒப்பந்த ஊழியர்களை ஆட்குறைப்பு செய்ய வேண்டும் என வேறு மோசமான உத்தரவு வந்துள்ளது. 

ஒப்பந்த ஊழியர்களுக்கு உடனடியாக சம்பளம் வழங்க வலியுறுத்தியும், ஆட்குறைப்பு நடவடிக்கைகளை கைவிட வலியுறுத்தியும்,  18.06.2019 அன்று சேலம் MAIN தொலைபேசி நிலையத்தில், BSNLEU - TNTCWU சங்கங்கள் சார்பாக மாலை நேர தர்ணா போராட்டம் நடத்தப்பட்டது. 

போராட்டத்திற்கு, தோழர்கள் M . விஜயன், (BSNLEU), L . செல்வராஜ் (TNTCWU) கூட்டு தலைமை தாங்கினர். கோரிக்கை முழக்கங்களை எழுப்பிய பின், TNTCWU தமிழ் மாநில உதவி செயலர் தோழர் C. பாஸ்கர், போராட்டத்தை துவக்கி வைத்து துவக்கவுரை வழங்கினார். BSNLEU மாவட்ட உதவி செயலர்கள் தோழர் S . ஹரிஹரன், M . சண்முகம், S . ராமசாமி கருத்துரை வழங்கினார்கள்.

BSNLEU தமிழ் மாநில உதவி தலைவர் தோழர் S . தமிழ்மணி, TNTCWU சேலம் மாவட்ட செயலர் தோழர் P . செல்வம், BSNLEU சேலம் மாவட்ட செயலர் தோழர் E . கோபால், கண்டன சிறப்புரை வழங்கினார்கள். 

போராட்டத்தில் மாவட்டம் முழுவதிலுமிருந்து 100க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள், நிரந்தர ஊழியர்கள் (சுமார் 30 பெண்கள் உட்பட) திரளாக கலந்து கொண்டனர். BSNLEU சேலம் மாவட்ட பொருளர் தோழர் P . தங்கராஜ், நன்றி கூறி, போராட்டத்தை முடித்து வைத்தார். 

தோழமையுடன், 
E . கோபால், 
மாவட்ட செயலர்