ஓய்வு பெறும் வயதை 60 லிருந்து 58 ஆக குறைக்கும் பிரச்சினை
தற்போது மத்திய சங்கத்திற்கு நாடு முழுவதிலிருந்து ஒய்வு பெறும் வயது சம்மந்தமாக என்ன நிலைமை என்று நமது தோழர்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.
மத்திய சங்கம் அறிந்த வகையில் அரசாங்கத்தில் இந்த பிரச்சினை சம்மந்தமாக கடும் விவாதம் நடந்து வருவதாக அறிகிறோம். கடந்த 6/6/2019 அன்று நமது சங்கத்தின் சார்பாக அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் நாம் சுட்டி காட்டியிருந்தோம்.
அதில் 2000 த்தில் BSNL ஆகும் போது அரசாங்கம் கொடுத்த உறுதிமொழி அரசாங்க உத்திரவு BSNL க்கும் அமுல்படுத்தப்படும். அதன்படி மத்திய அரசு ஊழியர்களூக்கு ஒய்வு பெறும் வயது 60 ஆகும்.ஆகவே இது BSNL லில் பணியாற்ற கூடிய ஊழியர்களுக்கும் பொருந்தும்.ஆகவே அரசாங்கம் 2000 ம் வருடம் கொடுத்த உறுதிமொழியை காப்பாற்றும் என நம்புகிறோம்.
மேலும் வதந்திகளை நம்ப வேண்டாம்
தோழமையுடன்,
E. கோபால்,
மாவட்ட செயலர்