Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Monday, June 24, 2019

ஊழியர் சரிபார்ப்பு தேர்தலில் கூட்டணிகள் அமைக்க கூடாது.

Image result for alliances



8வது சரிபார்ப்பு தேர்தலில் சங்கங்கள், அமைப்புகள், யாரும் யாருடனும் கூட்டணி அமைக்க கூடாது என 21.06.2019 அன்று கார்ப்பரேட் அலுவலகம் உத்தரவு வெளியிட்டுள்ளது.

அதன்படி,

1.அதிகாரிகளை உறுப்பினர்களாக கொண்டுள்ள எந்த சங்கமும் குறிப்பிட்ட எந்த ஒரு சங்கத்திற்கும் ஆதரவாக வாக்கு கேட்கக்கூடாது, தேர்தல் நடவடிக்கைகளில் தலையிட கூடாது, செல்வாக்கு செலுத்த கூடாது.

2, அதிகாரிகளையும், ஊழியர்களையும் உறுப்பினர்களாக கொண்டுள்ள எந்த ஒரு அமைப்பும், 8வது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தலில் பங்கு பெரும் சங்கத்தோடு எந்த ஒரு கூட்டணியம்  அமைக்கக்கூடாது.

3. ஊழியர் சங்கங்கள் மற்ற சங்கங்களோடு கூட்டணி அமைக்கக்கூடாது.

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
உத்தரவு காண இங்கே சொடுக்கவும்