21.06.2019 அன்று மாவட்ட சங்க அலுவலகத்தில், "கிளை செயலர்கள்" கூட்டம், நடைபெற்றது. கூட்டத்திற்கு தோழர் M . விஜயன், மாவட்ட தலைவர் தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்பு செயலர் தோழர் முருகேசன் வரவேற்புரை வழங்கினார்.
மாவட்ட செயலர் தோழர் E . கோபால், ஆய்படு பொருளை அறிமுகப்படுத்தி விளக்கவுரை வழங்கினார். தமிழ் மாநில உதவி தலைவர் தோழர் S . தமிழ்மணி சிறப்புரை வழங்கினார்.
விவாதத்தில் கிளை செயலர்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்தபின், மாவட்ட செயலர் தொகுப்புரை வழங்கினார். 9வது மாவட்ட மாநாடு, 8வது சரிபார்ப்பு தேர்தல் உள்ளிட்ட பல விஷயங்களில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. மாவட்ட பொருளர் தோழர் P . தங்கராஜ், நன்றி கூறி கூட்டத்தை முடித்து வைத்தார்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்