பிரபல ஆங்கில பத்திரிக்கை செய்தி
28.06.2019 அன்று வெளியான எக்னாமிக் டைம்ஸ் ஆங்கில செய்தி தாளில் BSNL ஊழியர்களுக்கு ஜூன் மாத சம்பளம் தாமதமின்றி, சரியான தேதியில் வழங்கப்படும் என செய்தி வெளியிட்டுள்ளது. அதற்கு தேவையான நிதி, BSNL வசம் உள்ளது எனவும் தகவல் தெரிவித்துள்ளது.
அதே வேளையில், BSNL நிறுவனத்திற்கு DoT துறை 14,000 கோடி ரூபாய் கொடுக்க வேண்டிய நிதி கொடுக்காமல் காலம் தாழ்த்துவதையும், செய்தியாக வெளியிட்டுள்ளது.
அதாவது, BWA ஸ்பெக்ட்ரம் கட்டணம் ரூ. 6,725 கோடி, அதிகமாக செலுத்தப்பட்ட ஓய்வூதிய பங்கீடு ரூ. 2,300 கோடி மற்றும் நக்சல் பாதிப்பு பகுதிகளில் சேவை வழங்கியதற்கான கட்டணம், அரசாங்க திட்டங்களை அமுலாக்கியதற்கான கட்டணம் என சுமார் ரூ.14,000 கோடி BSNL நிறுவனத்திற்கு வழங்காமல் DoT காலம் தாழ்த்துவதாகவும் தகவல் தெரிவித்துள்ளது.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
செய்தி காண இங்கே சொடுக்கவும்
தகவல் ஆதாரம்: மத்திய சங்க இணையம்