இல்லை என்கிறார் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர்
26.06.2019, நேற்று, பாராளுமன்றத்தில் உறுப்பினர்கள் உயர்திரு. கௌசேலேந்திர குமார் மற்றும் அந்தோ அந்தோணி ஆகியோர் எழுப்பிய கேள்விகளுக்கு மாண்புமிகு மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் திரு ரவி சங்கர் பிரசாத் அவர்கள் அளித்த பதில்கள் கீழே தரப்பட்டுள்ளது.
BSNL நிறுவனம் சம்மந்தமாக கேள்வி எண் 879 தேதி 26.06.2019
1. BSNL நிறுவனத்தை மூடும் எண்ணம் அரசிடம் உள்ளதா?
BSNL நிறுவனத்தை மூடும் எண்ணம் மத்திய அரசிடம் இல்லை.
2. இன்றைய தேதியில் BSNL நிறுவனம் எத்தனை தரைவழி, அலைபேசி இணைப்புகளை வைத்துள்ளது?
31.03.2019 அன்றைய நிலவரப்படி, BSNL தரைவழி இணைப்புகள் 1.12 கோடி, அலைபேசி இணைப்புகள் 11.57 கோடி
3. கடந்த 3 ஆண்டுகளில் BSNL நிறுவனம் வழங்கிய புதிய இணைப்புகள் எவ்வளவு?
ஆண்டு வாரியாக புதிய இணைப்புகள் வழங்கப்பட விவரம்
2016-17 - தரைவழி 11,82,630 அலைபேசி 2,50,19,494
2017-18 - தரைவழி 8.90,520 அலைபேசி 2,54,99,981
2018-19 - தரைவழி 7,19,228 அலைபேசி 2,16,48,088
2019-20(31.05.2019வரை) தரைவழி 95,063 அலைபேசி 35,90,444
4. BSNL நிறுவன சேவைக்குறைபாடு ஏதும் உண்டா? BSNL நிறுவனத்தின் கடந்த மூன்று ஆண்டு லாப நட்ட கணக்கு என்ன?
சேவை குறைபாடு சம்மந்தமாக புகார் இல்லை.
லாப- நட்ட கணக்கு
நட்டம் 2016-17 - ரூ. 4793 கோடி
2017-18 - ரூ. 7993 கோடி
2018-19 - ரூ. 7714 கோடி (தணிக்கை செய்யப்படவில்லை)
5. BSNL நிறுவனத்தில் பணி புரியக்கூடிய ஊழியர் எண்ணிக்கை எவ்வளவு?
31.05.2019 நிலவரப்படி ஊழியர் எண்ணிக்கை
அதிகாரிகள் - 46,597
ஊழியர்கள் - 1,17,305
மொத்தம் - 1,63,902
6. BSNL ஊழியர்களுக்கு சம்பளம் முறையாக வழங்கப்படுகிறதா?
BSNL ஊழியர்களுக்கு சம்பளம் முறையாக வழங்கப்படுகிறது. 2019 பிப்ரவரி மாதம் மட்டும் தாமதம் ஏற்பட்டது.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
விவரம் காண இங்கே சொடுக்கவும்