சேலம் மாவட்ட சங்கத்தின் 9வது மாவட்ட மாநாட்டை ஆத்தூரில் சிறப்பாக நடத்துவது என நமது செயற்குழு மற்றும் கிளை செயலர்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி, மாநாட்டின் வரவேற்பு குழுவை அமைப்பதற்கான கூட்டம், 05.07.2019 அன்று ஆத்தூரில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு தோழர் P . குமாரசாமி, கிளை தலைவர் தலைமை தாங்கினார். மாவட்ட உதவி செயலர் தோழர் S . ஹரிஹரன், வரவேற்புரை வழங்கினார்.
மாவட்ட மாநாட்டின் நோக்கம், 8வது சரிபார்ப்பு தேர்தல், நடைபெற்ற இயக்கங்கள், BSNL புத்தாக்கம், மூன்றாவது ஊதிய மாற்றம், BSNL சந்திக்கும் சவால்கள், AUAB கூட்ட முடிவுகள் உள்ளிட்ட விஷயங்களை மாநில உதவி தலைவர் தோழர் S . தமிழ்மணி மற்றும் மாவட்ட செயலர் தோழர் E . கோபால், விளக்கி, சிறப்புரை வழங்கினார்கள்.
பின்னர் தோழர் P . குமாரசாமி அவர்களை செயல் தலைவராகவும், தோழர் S . ஹரிஹரன் அவர்களை பொது செயலராகவும் கொண்ட வரவேற்பு குழு ஏகமனதாக அமைக்கப்பட்டது. தோழர் K . வரதராஜன், துணை தலைவராகவும், தோழர் A . அருள்மணி, M .சேகர், R . சதீஷ், உதவி செயலர்களாகவும், தோழர் P . தங்கராஜ் பொருளராகவும், தோழர் G.R .வேல்விஜய், உதவி பொருளராகவும் கொண்ட வரவேற்பு குழு ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டது. அதேபோல், உணவு குழு, விளம்பர குழு, தொண்டர் குழு உள்ளிட்ட குழுக்களும் முறையாக அமைக்கப்பட்டது.
உடனடியாக ஆத்தூர் தோழர்கள் மாநாட்டு நன்கொடையாக ரூ.15,000 த்தை முதல் தவணையாக வழங்கினார்கள். TNTCWU ஆத்தூர் கிளை தோழர்கள் மாநாட்டின் சார்பாளர்கள் பயன்படுத்தும் வகையில், குறிப்பு அட்டை (NOTE PAD) வழங்க அறிவிப்பு வெளியிட்டார்கள்.
சிறப்பான மற்றும் நினைவை விட்டு அகலாத மாவட்ட மாநாடாக 9வது மாவட்ட மாநாட்டை நடத்த ஆத்தூர் கிளைகள் உறுதி பூண்டுள்ளது. ஆத்தூர் நகர கிளை செயலர் தோழர் A . அருள்மணி, நன்றி கூறி கூட்டத்தை முடித்து வைத்தார்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்