Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Friday, July 12, 2019

ஒப்பந்த ஊழியர்களின் ஊதியத்திற்கான தர்ணாவை வெற்றிகரமாக்கிடுவோம்!!


16.07.2019 அன்று சென்னையில் திரள்வோம் 

நாடு முழுவதும் BSNLல் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு கடந்த ஏழு மாதங்களாக ஊதியம் வழங்காத அவல நிலை நீடிக்கிறது. உடனடியாக அவர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என BSNL நிர்வாகத்தை வற்புறுத்தி 16.07.2019 அன்று BSNL ஊழியர் சங்கமும், TNTCWU அங்கமாக உள்ள BSNL CCWFம் இணைந்து மாநில தலைநகரங்களில் தர்ணா போராட்டம் நடத்த அறைகூவல் விட்டுள்ளன. 

அதனடிப்படையில் தமிழகத்தில் சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள தமிழ் மாநில தலைமை பொது மேலாளர் அலுவலகம் முன்பு பெருந்திரள் தர்ணா நடைபெற உள்ளது. BSNL ஊழியர் சங்கம், TNTCWU சங்கம் எப்பொழுதுமே ஒப்பந்த தொழிலாளர் பிரச்சனைகளில் இணைந்து களம் கண்டு வருவது அனைவரும் அறிந்தது தான். 
இது ஒப்பந்த ஊழியர் சம்பள பிரச்சனை என இல்லாமல் இரண்டு சங்க தோழர்களும் அலைகடலென திரள்வோம். 

ஒட்டுமொத்தமாக சுமார் 25 கோடி நிதி தமிழ் மாநிலத்திற்கு மட்டும் உடனடி தேவையாக இருக்கும் போது, ஹவுஸ் கீப்பிங் பகுதிக்கு ஒரு கோடியும், மேன் பவர் பகுதிக்கு 75 லட்சமும் நிதி வந்துள்ளதாக தகவல் வந்துள்ளது. இது யானை பசிக்கு சோலப்பொறி போல் உள்ளதால், போராட்டம் மூலம் தான் நாம் நமது பட்டினியை போக்க முடியும். போராட்டத்தை தீவிரப்படுத்துவோம். 16.07.2019 அன்று சென்னையில் சங்கமிப்போம். 

தோழமையுடன்.
E . கோபால்,
மாவட்ட செயலர், BSNLEU 
M . செல்வம்,
மாவட்ட செயலர், TNTCWU