16.09.2019 அன்று நடைபெறவுள்ள 8வது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தலுக்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட நிர்வாகம் இன்று, (18.07.2019) வெளியிட்டுள்ளது.
அதன்படி, 736 வாக்காளர்கள் நமது சேலம் மாவட்டத்தில் உள்ளனர். (ஆண் வாக்காளர்கள் 616, பெண் வாக்காளர்கள் 120). சேலம் நகர 4 வாக்குச்சாவடிகள் ஒன்றாக இணைக்கப்பட்டு, சேலம் GM அலுவலகம், ஆத்தூர், மேட்டூர், நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு ஆகிய 6 இடங்களில் மட்டும் தான் இந்த முறை வாக்குச்சாவடிகள் இருக்கும்.
24.07.2019க்குள் இதில் திருத்தம் ஏதும் இருப்பின் தெரிவிக்க, கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. கிளை சங்கங்கள் இதை ஆழமாக சரிபார்த்து, திருத்தங்கள் இருப்பின், உடனடியாக மாவட்ட சங்கத்திற்கு தெரிவிக்கும்படி தோழமையுடன் கேட்டு கொள்கிறோம். குறிப்பாக, தோழர்களின் பெயர் வாக்கு சாவடி மாறி இருக்க வாய்ப்புள்ளது. அதை சரிபார்க்கவும்.
STP, STR, CIVIL, NWOP, SALES, ELECTRICAL, BSS, உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் இதில் அடங்கும். ஆகையால் கூடுதல் கவனத்துடன் கிளைகள் இதை சரிபார்க்கவும்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
பட்டியல் காண இங்கே சொடுக்கவும்