சேலம் மாவட்ட சேம நல நிதியிலிருந்து, ஊழியர்களுக்கு கணினி கடன் வழங்க வேண்டும் என நாம் கோரியதன் அடிப்படையில், சென்ற வருடம் 26.07.2018 அன்று 136 அதிகாரிகள்/ஊழியர்களுக்கு கணினி கடன் வழங்க உத்தரவு வெளியானது.
2018ல் விண்ணப்பித்து காத்திருப்பு பட்டியலில் உள்ள எஞ்சிய ஊழியர்களுக்கும் கடன் வழங்க வேண்டும் என நாம் கடந்த சில வாரங்களாக, மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தி வந்தோம். நமது கோரிக்கை பரீசீலிக்கப்பட்டு, நிதி ஆதாரங்கள் அடிப்படையில், நமது கோரிக்கை ஏற்கப்பட்டு, இரண்டாவது பட்டியல், 06.07.2019 அன்று வெளியிடப்பட்டது.
12.5 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, 50 ஊழியர்களுக்கு, தலா ரூ. 25,000 வீதம் பிரித்து வழங்கப்படும். மாதம் ரூ.1000 வீதம், 25 மாதங்கள் பிடித்தம் செய்யப்படும். 26வது மாதத்தில் ரூ.1354.00 ஒரே தவணையில், வட்டியாக பிடித்தம் செய்யப்படும்.
09.07.2019 முதல் சேலம் PGM அலுவலகத்தில், பண பட்டுவாடா நடைபெறும்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
உத்தரவு மற்றும் விவரம் காண இங்கே சொடுக்கவும்