BSNLன் புத்தாக்கத்திற்கு தேவையான குறுகிய கால மற்றும் நீண்ட கால முதலீடுகளை அரசாங்கம் செய்ய வேண்டும் என 01.07.2019 அன்று மாநிலங்களவையில் தோழர் இளமறம் கரீம், மார்க்சிஸ்ட் MP அவர்கள் பிரச்சனையை எழுப்பினார். BSNLன் பொருளாதார நிலை கவலைக்கிடமாகவும், நாளுக்கு நாள் குறைந்துக் கொண்டே வருவது தொடர்பாகவும் தெரிவித்ததோடு, மின்சாரக் கட்டணம் கூட அந்த நிறுவனத்தால் கட்டமுடியவிலை என்றும், ஒப்பந்த ஊழியருக்கு ஆறு மாத காலமாக தரப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.
இதற்கு பதிலளித்த மாநிலங்களவையின் தலைவர் திரு வெங்கையா நாயுடு அவர்கள், இது ஒரு முக்கியமான பிரச்சனை என்றும் அது தொடர்பாக மத்திய தொலை தொடர்பு அமைச்சர் அவையில் இருக்கும் சமயத்தில் மாநிலங்களவையில் விவாதிக்க ஏற்பாடு செய்வதாகவும் உறுதி அளித்துள்ளார்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
தோழர் கரீம் மத்திய அமைச்சருக்கு எழுதிய கடிதம் காண இங்கே சொடுக்கவும்
தோழர் கரீம் விதி 180A ன் கீழ் வழங்கிய சிறப்பு கவன ஈர்ப்பு நோட்டீஸ் காண இங்கே சொடுக்கவும்