Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Wednesday, July 3, 2019

BSNLEU - TNTCWU உண்ணாவிரத போராட்டம் - 03.07.2019 - இரண்டாம் நாள்


BSNLEU - TNTCWU தமிழ் மாநில சங்கங்கள் அறைகூவலுக்கினங்க, ஒப்பந்த ஊழியர்களுக்கு உடனடியாக சம்பள பட்டுவாடா செய்ய வலியுறுத்தி, மூன்று நாள் உண்ணாவிரத போராட்டத்தின், இரண்டாம் நாள் போராட்டம், இன்று, 02.07.2019, நாமக்கல் தொலைபேசி நிலையத்தில் நடைபெற்றது.

போராட்டத்திற்கு தோழர்கள் M . விஜயன், (BSNLEU ), K . ராஜன் (TNTCWU) கூட்டு தலைமை தாங்கினார்கள். ஆர்ப்பாட்ட கோஷங்களுக்கு பிறகு, TNTCWU தமிழ் மாநில உதவி செயலர் தோழர் C . பாஸ்கர், துவக்கவுரை வழங்கினார்.

BSNLEU மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள் S. ராமசாமி, P . குமாரசாமி, P . தங்கராஜ், M . சண்முகம், P . செல்வம், கிளை செயலர்கள் தோழர்கள் R . ரமேஷ் (வேலூர்), G.R. வேல்விஜய் (ஆத்தூர் ஊரகம்),  N . பாலகுமார் ( GM அலுவலகம்), M . பாலசுப்ரமணியம் (நாமக்கல் நகரம்), சின்னசாமி (நாமக்கல் ஊரகம்), P .M . ராஜேந்திரன் (ராசிபுரம்) ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

TNTCWU சங்க நிர்வாகிகள் தோழர்கள் மனோகரன் (நாமக்கல்) விஜயகுமார் (ராசிபுரம்), கண்ணன் (வேலூர்) ராஜேந்திரன் (அம்மாபேட்டை) ஜெய்சங்கர் (கொண்டலாம்பட்டி) ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள். 

TNTCWU சேலம் மாவட்ட செயலர் தோழர் M . செல்வம்,  BSNLEU தமிழ் மாநில உதவி தலைவர் தோழர் S . தமிழ்மணி ஆகியோர் கண்டன சிறப்புரை வழங்கினார்கள்.  BSNLEU சேலம் மாவட்ட செயலர் தோழர் E . 
கோபால், நிறைவுரை வழங்கினார்.

BSNLEU நாமக்கல் கிளை நிர்வாகி தோழர் ரவிமணி நன்றி கூறி இரண்டாம் நாள் போராட்டத்தை நிறைவு செய்து வைத்தார்.  75க்கும் மேற்பட்ட தோழர்கள் (15 பெண்கள் உட்பட) போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்