BSNLEU - TNTCWU தமிழ் மாநில சங்கங்கள் அறைகூவலுக்கினங்க, ஒப்பந்த ஊழியர்களுக்கு உடனடியாக சம்பள பட்டுவாடா செய்ய வலியுறுத்தி, மூன்று நாள் உண்ணாவிரத போராட்டத்தின், மூன்றாம் நாள் போராட்டம், 04.07.2019, அன்று திருச்செங்கோடு தொலைபேசி நிலையத்தில் நடைபெற்றது.
போராட்டத்திற்கு தோழர்கள் P . தங்கராஜ், (BSNLEU ), K . ராஜன் (TNTCWU) கூட்டு தலைமை தாங்கினார்கள். ஆர்ப்பாட்ட கோஷங்களுக்கு பிறகு, TNTCWU சேலம் மாவட்ட செயலர் தோழர் M . செல்வம் போராட்டத்தை முறைப்படி துவக்கி வைத்து துவக்கவுரை வழங்கினார்.
BSNLEU மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள் S. ராமசாமி, P . செல்வம், கிளை செயலர்கள் தோழர்கள் R . ரமேஷ் (வேலூர்), V. பரந்தாமன் (பள்ளிபாளையம்), P .M .ராஜேந்திரன், (ராசிபுரம்), ஆண்டியப்பன் (திருச்செங்கோடு நகரம்) ரங்கசாமி (திருச்செங்கோடு ஊரகம்), M . கோபாலன் (மேட்டூர்), M . சண்முகம் (எடப்பாடி), திருச்செங்கோடு பகுதி மூத்த BSNLEU தோழர் M . ராஜலிங்கம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
TNTCWU சங்க நிர்வாகிகள் தோழர்கள் விஜயகுமார் (ராசிபுரம்), வெங்கடேஸ்வரன் ( திருச்செங்கோடு), ஜெய்சங்கர் (கொண்டலாம்பட்டி), முருகன் (STR), சத்தியமூர்த்தி (மேட்டூர்), ராதா கிருஷ்ணன், மாவட்ட உதவி தலைவர் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.
TNTCWU தமிழ் மாநில உதவி செயலர் தோழர் C . பாஸ்கர், BSNLEU சேலம் மாவட்ட உதவி செயலர் தோழர் S . ஹரிஹரன், ஆகியோர் கண்டன சிறப்புரை வழங்கினார்கள். BSNLEU தமிழ் மாநில உதவி தலைவர் தோழர் S . தமிழ்மணி, நிறைவுரை வழங்கினார்.
BSNLEU திருச்செங்கோடு ஊரக கிளை செயலர் தோழர் ரங்கசாமி நன்றி கூறி மூன்று நாள் போராட்டத்தை நிறைவு செய்து வைத்தார். 60க்கும் மேற்பட்ட தோழர்கள் (10 பெண்கள் உட்பட) போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
பொதுவாக தோழர்களே! மூன்று நாள் தொடர் போராட்டம், அதுவும் உடலை வருத்தும் பட்டினி போராட்டம், கடுமையாக பொருளாதார நெருக்கடியில் ஒப்பந்த ஊழியர்கள் இருக்கும் போது நடைபெற்ற போராட்டம், வெயிலின் தாக்கம், என்று இருந்தாலும் நம்முடைய நிரந்தர ஊழியர்களும், ஒப்பந்த ஊழியர்களும் திரளாக போராட்டத்தில் கலந்து கொண்டது பாராட்டுக்குரியது.
விரிவான ஏற்பாடுகளை, குறுகிய காலத்தில் செய்த சேலம் நகர, நாமக்கல், திருச்செங்கோடு இரண்டு சங்க கிளைகளை எவ்வளவு பாராட்டினாலும் தகும். போராட்டத்தில் கலந்து கொண்ட இரண்டு சங்க மாநில, மாவட்ட, கிளை சங்க நிர்வாகிகள், முன்னணி தோழர்கள், ஓய்வு பெற்ற தோழர்கள், தோழர்கள், தோழியர்கள் அனைவருக்கும் இரண்டு மாவட்ட சங்கங்களின் செவ்வணக்கம்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்