தொழிற்சங்க நடவடிக்கைகளை தடை செய்து BSNL கார்ப்பரேட் அலுவலகம் வெளியிட்ட உத்தரவிற்கு சென்னை உயர் நீதி மன்றம் இடைக்கால தடை விதித்தது.
8வது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தல் நடைபெறும் வரை ஆர்ப்பாட்டம், தர்ணா போன்றவற்றிற்கு தடை விதித்து கார்ப்பரேட் அலுவலகம் வெளியிட்டிருந்த உத்தரவிற்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது என்பது மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த உத்தரவிற்கு தடை வழங்க வேண்டும் என, மத்திய சங்கத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில், சென்னை உயர் நீதி மன்றத்தில், தமிழ் மாநில சங்கத்தின் சார்ப்பாக மாநில செயலாளர் தோழர் A.பாபு ராதாகிருஷ்ணன் மனுதாக்கல் செய்தார். 02.07.2019 அன்று கார்ப்பரேட் அலுவலகம் வெளியிட்டிருந்த அந்த கடிதத்தில், ஆர்ப்பாட்டங்கள், தர்ணாக்கள் போன்றவற்றை நடத்தும் தொழிற்சங்கங்கள், 8வது சங்க அங்கீகார தேர்தலில் போட்டியிடுவதை தடை செய்யப்படும் என்றும் மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.
BSNL கார்ப்பரேட் அலுவலகத்தின் SR பிரிவு வெளியிட்டுள்ள இந்தக் கடிதம், விதிகளுக்கு அப்பாற்பட்டது, அடக்குமுறையானது மற்றும் அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது. எனவே இந்த உத்தரவிற்கு எதிராக நீதிமன்றத்தில் முறையிடுவது என BSNL ஊழியர் சங்கம் முடிவெடுத்தது.
இந்த தீர்ப்பிலிருந்து SR பிரிவு தகுந்த பாடம் படித்து, தொழிற்சங்கங்களின் அடிப்படை உரிமைகளை நசுக்க முயற்சிக்காமல் இருக்க வேண்டும். BSNLல் தொழில் அமைதியை கெடுக்கும் இது போன்ற தேவையற்ற நடவடிக்கைகளில் SR பிரிவு மீண்டும் இறங்காமல் இருப்பதை கார்ப்பரேட் நிர்வாகத்தில் உள்ள இதற்கான பொறுப்பான அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னை உயர் நீதி மன்றத்தில் இதற்கான மனு தாக்கல் செய்வதற்கு பாடுபட்ட வழக்கறிஞர் தோழர் ஸ்டாலின் அபிமன்யு அவர்களுக்கும், இந்த வழக்கை சென்னை உயர் நீதி மன்றத்தில் சிறப்பாக வாதாடி அந்த உத்தரவிற்கு இடைக்கால தடையினை பெற்றுத் தந்த மூத்த வழக்கறிஞர் திரு சந்திரகுமார் அவர்களுக்கும், வழக்கு தொடுத்த தமிழ் மாநில சங்கத்திற்கும், சேலம் மாவட்ட சங்கத்தின் தோழமை வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்.
வாழ்த்துக்களுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்