தமிழ் மாநில உதவி தலைவர் தோழர் S . தமிழ்மணி துவக்கவுரை வழங்கினார். ஆய்படு பொருளை அறிமுப்படுத்தி, மாவட்ட செயலர் தோழர் E . கோபால் சிறப்புரை வழங்கினார்.
புதிய மாவட்ட சங்க நிர்வாகிகள் விவாதத்தில் பங்குபெற்றனர். விவாதத்திற்கு மாவட்ட செயலர் பதில் அளித்தார். மாவட்ட சங்க நிர்வாகிகளுக்கு பொறுப்பு கிளைகள் முடிவு செய்யப்பட்டது. நடந்து முடிந்த 9வது மாவட்ட மாநாடு சம்மந்தமாக பரிசீலனை நடைபெற்றது. மாவட்ட பொருளர் தோழர் P . தங்கராஜு நன்றி கூறி கூட்டத்தை முடித்து வைத்தார்.
முன்னதாக, காலையில் நகர பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் துவங்கும் விதமாக, பொது மேலாளர் அலுவலகத்தில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. புதிய மாவட்ட சங்க நிர்வாகிகள் பட்டியல் நிர்வாகத்திடம் வழங்கப்பட்டு, புதிய நிர்வாகிகள் PGM அவர்களிடம் அறிமுகப்படுத்தப்பட்டனர்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்