20.08.2019 அன்று சேலம் செவ்வை தொலைபேசி நிலைய, கூட்ட அரங்கில், 9வது மாநாட்டின் செயற்குழு நடைபெற்றது. மாவட்ட தலைவர் தோழர் M . விஜயன், செயற்குழுவிற்கு தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்பு செயலர் தோழர் P . முருகேசன் அனைவரையும் வரவேற்றார்.
தமிழ் மாநில உதவி தலைவர் தோழர் S .தமிழ்மணி செயற்குழுவை துவக்கி வைத்து துவக்கவுரை வழங்கினார். மாநாட்டு அறிக்கையை அறிமுகப்படுத்தி தோழர் E . கோபால், பேசினார்.
அறிக்கை முழுவதும் படிக்கப்பெற்ற பின், நடைபெற்ற விவாதத்தில் சொல்லப்பட்ட திருத்தங்கள் செய்யப்பட்டவுடன், அறிக்கை ஏகமனதாக ஏற்கப்பட்டது. நிதி நிலை அறிக்கையையும் மாவட்ட பொருளர் தோழர் P . தங்கராஜு, சமர்ப்பித்தார். அதுவும் ஏகமனதாக ஏற்கப்பட்டது.
பின்னர் அமைப்பு நிலை, 9வது மாநாட்டு ஏற்பாடுகள் உள்ளிட்ட விஷயங்கள் விவாதிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டது. தோழர் P . தங்கராஜு, நன்றி கூறி கூட்டத்தை முடித்து வைத்தார். சிறப்பான ஏற்பாடுகள் செய்த செவ்வை , STR கிளை தோழர்களை மாவட்ட சங்கம் பாராட்டுகிறது.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்