Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Tuesday, September 17, 2019

சேலம் மாவட்டத்தில் 98.37% வாக்கு பதிவு! வாக்களித்த அனைவருக்கும் நன்றி!!


16.09.2019 அன்று நடைபெற்ற 8வது சரிபார்ப்பு தேர்தலில் நமது சேலம் மாவட்டத்தில் 98.37 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக நிர்வாகம் அதிகாரபூர்வமாக தகவல் வெளியிட்டுள்ளது.

இறுதி வாக்காளர் பட்டியல் படி மொத்த வாக்காளர்கள்: 743
JTO பதவி உயர்வு பெற்றவர்கள் : 7
தபால் ஒட்டு : 1
ஆக நேரடி வாக்காளர்கள்: 735
வாக்கு பதிவு செய்தவர்கள்: 723 (இறப்பு 3)

வாக்கு சாவடி வாரியாக 
(வாக்கு பதிவு செய்தவர்கள்/மொத்த வாக்காளர்கள்)

11/1 ஆத்தூர் : 84/85
11/2 சேலம் PGM அலுவலகம்: 338/349
11/3 மேட்டூர் : 49/51
11/4 நாமக்கல்: 104/106
11/5 ராசிபுரம் : 42/43
11/6 திருச்செங்கோடு: 106/109

மொத்தம் 723/743

தங்களது ஜனநாயக கடமையை திறம்பட ஆற்றிய அனைத்து வாக்காளர்களுக்கும், சேலம் மாவட்ட BSNLEU சார்பாக முதலில் நெஞ்சு நிறை நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

BSNLEU சங்கம் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கோடு கடந்த 40 நாட்களாக தேனீக்கள் போல் சுற்றி, பிரச்சாரம் மேற்கொண்ட மாநில, மாவட்ட, கிளை, சங்க நிர்வாகிகளுக்கும், முன்னணி தோழர்களுக்கும், ஓய்வு பெற்றாலும் நமது பேரியக்கத்தின் வெற்றிக்காக உழைத்த ஓய்வு பெற்ற தோழர்களுக்கும், சம்பளம் வர வில்லை என்று சொன்னாலும், ஒப்பந்த ஊழியர் விடிவெள்ளி BSNLEU இயக்கம் தான் என பணியாற்றிய ஒப்பந்த ஊழியர்களுக்கும், நமது செவ்வணக்கங்கள்

நாளைய  விடியல் நிச்சயம் நமதாக இருக்கும் என்ற நல்வாழ்த்துக்களுடன்,

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
நிர்வாக தகவல் காண இங்கே சொடுக்கவும்